சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எதை சாப்பிட வேண்டும்..? சாப்பிடக் கூடாது?

ne
இன்று பல மக்கள் சிறுநீரக நோயினால் பாதிக்கப்படுவதே மருத்துவ உலகின் மிகப் பெரிய சவாலாக உள்ளது.

சிறுநீரகம் உடலில் நீரினை வடிகட்டுவதற்கும் நச்சுக்களையும் வெளியேற்றுவதற்கும் உதவுவதுடன் உடலில் உள்ள அதிகமான நீரை சிறுநீர் மூலமாக வெளியேற்றுகின்றது.

பலருக்கு சிறுநோரகத்தில் கற்கள் உருவாகின்றன. இந்த கற்கள் சிறுநீரில் உள்ள சிறு துகள்கள் படிவதனால் உருவாகின்றன. இவை வலியை ஏற்படுத்துவதுடன் சிறுநீரக குழாயினில் அடைப்பை ஏற்படுத்துகின்றது.

சிறுநீரகக் கற்கள் Calcium phosphate, cystine, calcium oxalate, uric acid படிவுகளினால் ஏற்படுகின்றது. இதில் மனிதனில் calcium oxalate படிவினாலே கற்கள் உருவாகின்றன.

நீங்கள் சிறுநீரகக் கற்களினால் அல்லது சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால் மீண்டும் கற்கள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. எனவே சில உணவு வகைகளை தவிர்ப்பது சிறந்தது.

காய் வகைகள், பழங்கள், கொழுப்பு குறைந்த பால் உணவு பொருட்கள், கோழி, பீன்ஸ், மீன், கடலை, விதைகள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதனால் சிறுநீரக கற்கள் உருவாகாமல் தவிர்க்க முடியும்.

மேலும் உணவுகளில் சோடியம், சர்க்கரை அளவு குறைவாக இருப்பது அவசியம்.

சிறுநீரகக் கற்கள் உருவாகமல் இருப்பதற்கு சில உணவுகளை கண்டிப்பாக தவிர்ப்பது அவசியம்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்.

1. காஃபின்(caffeine) மற்றும் சோடா.

சிறுநீரகக் கற்கள் உருவாகினால் அதிகமான நீரை அருந்துவது அவசியமானது. ஆனால் காஃபின் அளவை குறைக்க வேண்டும்.

ஒரு நாளிற்கு 2 கோப்பைக்கு அதிகமான கோப்பி, தேநீர், குளிர்பானங்களை அருந்துவதனால் உடல்வறட்சி உருவாகும்.

2. சோடியம் அதிகமுள்ள உணவுகள்.

பதப்படுத்தி பொதி செய்யப்பட்ட உணவுகளில் சோடியம் அளவு அதிகமாக இருக்கும், உணவின் பாதுகாப்பிற்காக சோடியம் அதிகம் சேர்ப்பதனால் இவற்றை தவிர்ப்பதுடன் உணவில் உப்பை குறைவாகவும் பயன்படுத்தல் முக்கியமானது.

3. புரோட்டின் நிறைந்த உணவுகள்.

புரோட்டின் அதிகம் உள்ள இறைச்சி, மீன் உணவுகளை குறைந்தளவு சேர்த்து கொள்ளவும்.

அத்துடன் மெலிந்த இறைச்சிகளை குறைந்தளவு எண்ணெய் பயன்படுத்தி அல்லது அவித்து சமைத்தல் சிறந்தது.

அத்துடன் உணவில் காரத்தை குறைவாக சேர்த்துக் கொள்வது சிறந்தது.

4. கொழுப்பு நிறைந்த உணவுகள்.

கொழுப்புகள் அதிகம் நிறைந்த பாலாடைக்கட்டிகள் போன்ற உணவுகளை தவிர்த்தல் அவசியமானது. குறைந்தளவு கொழுப்புகள் உள்ள உணவு, கொழுப்பு அகற்றிய பால் போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ளலாம்.

அதிகமான கொழுப்புகள் ஆபத்தை ஏற்படுத்தும்.


5. கல்சியம் உணவுகள்.

சிறுநீரக கற்களினால் பாதிக்கப்பட்டவர்கள் கல்சியம் மற்றும் விட்டமின் டி உள்ள உணவுகளை தவிர்ப்பது அவசியமானது.

அத்துடன் Antacid இல் அதிகளவான கல்சியம் காணப்படுகின்றது. கல்சியம் நிறைந்த உணவுகளை குறைந்தளவு உட்கொள்வதுடன் மீனெண்ணெய், விட்டமின் டி மருந்துகளை எடுத்துக் கொள்வதற்கு முன்பு மருத்துவர் ஆலோசனை பெறுவது முக்கியமானது.

ஏனெனில் இவை சிறிநீரக கற்களினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு ஆபத்தை அதிகரிக்கும்.

6. Oxalate அதிகம் உள்ள உணவுகள்.

சிறுநீரக கற்கள் Calcium oxalate இனால் உருவாவதனால் oxalate நிறைந்த உணவை தவிர்ப்பது முக்கியமானது.

Oxalate அதிகமுள்ள கோப்பி, தேயிலை, பீற்றூட், தக்காளி, கீரை வகைகள், தக்காளி சூப், பொதி செய்யப்பட்ட சாலட், ஸ்ட்ராபரி போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

மேலும் சாக்லேட், சோயா தயிர், கடலை போன்றவற்றை தவிர்ப்பது சிறந்தது.

மருத்துவர்கள் நீங்கள் யூரிக் அமில கற்களினால் பாத்திக்கப்பட்டுள்ளதாக கூறினால் இந்த உணவுகளை தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை.

7. மதுபானம்.

மதுபானம் சிறுநீரக கற்கள் உருவாவதற்கு நேரடியான தொடர்பு இல்லாத போதிலும் இவை ஆபத்தை அதிகரிக்கச் செய்கின்றன.
இதில் உள்ள Purine யூடிக் அமில கற்களை உருவாக உதவுவதுடன் சிறுநீரகத்தின் தொழிற்பாட்டை பாதிக்கவும் செய்கின்றது.

8. நெத்தலி.

நெத்தலி கொழுப்பு நிறைந்த மீன் வகை, இது சிறுநீரக கற்கள் உருவாவதற்கு உதவுவதனால் இவற்றை தவிர்ப்பது சிறந்தது.

9. தண்ணீர்விட்டான் கொடி.

இது சிறுநீரகத்தை வெளியேற்ற உதவினாலும் இவற்றை சிறுநீரக கற்களினால் பாதிக்கப்படும் போது தவிர்ப்பது அவசியமானது.

10. Brewer’s Yeast

நீங்கள் யூரிக் அமில கற்களினால் பாதிக்கப்பட்டிருந்தால் brewer’s yeast இல் அதிகளவு purine இருப்பதனால் இதனை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

மேலும் காலிஃபிளவர், சிறுநீரகம், ஈரல் இறைச்சி துண்டுகள், காளான், ஒலிவ் எண்ணெய் போன்றவற்றை தவிர்ப்பதும் சிறந்தது.- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!