கூகுளின் ஜிமெயில் சேவையில் புதிய அம்சம் அறிமுகம்..!


கூகுளின் ஜிமெயில் சேவை சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்டு புதிய அம்சங்களை வழங்கப்பட்ட நிலையில் விரைவில் ஸ்மார்ட் கம்போஸ் எனும் வசதி வழங்கப்பட இருக்கிறது. கூகுளின் I/O 2018 டெவலப்பர் நிகழ்வில் இதற்கான அறிவிப்பை கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அறிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இயங்கும் இந்த வசதி மின்னஞ்சல்களை வேகமாக டைப் செய்ய உதவுகிறது. ஜிமெயில் ஸ்மார்ட் கம்போஸ் அம்சம் சொற்றொடர்களை பரிந்துரைக்கும், இவற்றை தேர்வு செய்ய கீபோர்டில் டேப் பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் நேரம் மிச்சப்படுத்துவதோடு எழுத்து மற்றும் இலக்கிய பிழைகளை பெருமளவு தவிர்க்க முடியும்.


ஜிமெயிலில் ஸ்மார்ட் கம்போஸ் அம்சம் வரும் வாரங்களில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிசூட் வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட் கம்போஸ் அம்சம் வரயிருக்கும் மாதங்களில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய மேம்படுத்தப்பட்ட ஜிமெயில் சேவையை இயக்க வாடிக்கையாளர்கள் ஜிமெயில் Settings – Try the new Gmail ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும்.

கூகுள் I/O 2018 டெவலப்பர் நிகழ்வின் முதல் நாளில் ஜிமெயிலில் ஸ்மார்ட் கம்போஸ் மட்டுமின்றி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் மற்றும் இது பயன்படுத்தப்பட இருக்கும் பல்வேறு இதர துறைகள் சார்ந்த முக்கிய அறிவிப்புகளும், விளக்க வீடியோக்களும் ஒளிபரப்பப்பட்டன.

அந்த வகையில் ஜிமெயில், கூகுள் அசிஸ்டண்ட், மருத்துவ துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பங்கு மற்றும் இது சார்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளும் கூகுள் I/O 2018 டெவலப்பர் நிகழ்வின் முதல் நாளில் வெளியிடப்பட்டன.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!