சளி, இருமல் இருந்தால் எப்பவும் இந்த உணவுகளை மட்டும் தொட்டும் பாக்காதீங்க..!!


கோடைக்காலம் ஆரம்பித்து விட்டது. இக்காலத்தில் வியர்வை அதிகம் வெளியேறுவதால், பலரும் சளி, இருமலால் அதிகம் அவஸ்தைப்படுவார்கள். பொதுவாக நம் மக்கள் சளி, இருமலுக்கு மாத்திரைகளை விட, கை வைத்தியங்களைத் தான் மேற்கொள்வார்கள்.

மேலும் சளி, இருமலில் இருந்து விடுவிக்கும் உணவுகள் என்னவென்று தெரிந்து, அவற்றையும் அதிகம் சாப்பிடுவார்கள். நம்மில் பலருக்கும் இருமல் இருந்தால், எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது என்று சரியாக தெரியாது.


எனவே இருமல் அதிகம் இருந்தால் சாப்பிடக்கூடாத உணவுகளைப் பட்டியலிட்டுள்ளது. இவற்றை இருமலின் போது சாப்பிட்டால், நிலைமை இன்னும் மோசமாகும். எனவே இருமல் சரியாகும் வரை, இந்த உணவுகளில் இருந்து விலகியே இருங்கள்.


காப்ஃபைன் பானங்கள்
காப்ஃபைன் நிறைந்த காபி, டீ போன்ற பானங்களை இருமல் இருக்கும் போது குடிக்கக்கூடாது. ஏனெனில் இதில் உள்ள காப்ஃபைன் தொண்டையை வறட்சியடையச் செய்வதோடு, உணவுகளை விழுங்கும் போது அசௌகரியத்தையும் உணர வைக்கும்.


பதப்படுத்தப்பட்ட உணவுகள்
பதப்படுத்தப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்பட்ட உணவுகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமடையச் செய்வதுடன், பல அத்தியாவசிய செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தும். எனவே இருமலின் போது பாஸ்தா, நூடுல்ஸ், பிரட், சிப்ஸ் போன்றவற்றை தெரிந்தோ தெரியாமலோ சாப்பிட்டுவிடாதீர்கள்.


வறுத்த/பொரித்த உணவுகள்
உடல்நலம் சரியில்லாத போது, எண்ணெயில் பொரித்த அல்லது வறுத்த உணவுகளைத் தொடாதீர்கள். இது இருமலை மேலும் தான் அதிகரிக்கும். எப்படியெனில், எண்ணெயில் நீண்ட நேரம் பொரிக்கும் போது, எண்ணெயில் உருவாகும் அக்ரோலின் என்னும் உட்பொருள், இருமலை தீவிரமாக்கி, தொண்டை கரகரப்பை அதிகரிக்கும்.


குளிர்ச்சியான உணவுப் பொருட்கள்
குளிர்ச்சியான உணவுப் பொருட்களான ஐஸ்-க்ரீம், குளிர்பானங்கள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். இது சுவாசப் பாதையை வறட்சியடையச் செய்வதோடு, இருமலை உண்டாக்கும் தொற்றுக்களை தீவிரமாக்கி, இருமலை மேலும் அதிகரிக்கும்


மது
மது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமடையச் செய்யும் மற்றும் உடலை வறட்சியடையச் செய்து, இருமலை இன்னும் தீவிரமாக்கும். அதோடு இருமல் போய்விட்டது என்று மது அருந்துவதை நிறுத்தாமல் குடித்துக் கொண்டே இருந்தால், ஒரு கட்டத்தில் அது தீவிர பிரச்சனையை சந்திக்க வைத்துவிடும்.


பால்
தொண்டையில் உள்ள சளியை வெளியேற்ற வேண்டுமானால், சளியை உருவாக்கும் பால் பொருட்களை இருமலின் போது தவிர்க்க வேண்டும். பொதுவாக பால் சுவாசப் பாதையில் சளியின் உற்பத்தியைத் தூண்டும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!