இதய நோய் உள்ளவர்கள் அதிக தண்ணீர் பருகினால் ஆபத்தா..?


தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டியது கட்டாயமா என்பது குறித்து மருத்துவர்கள் கூறுவதை பார்க்கலாம்.

மனிதனாக பிறந்த அனைவருக்கும் தண்ணீர் அடிப்படை தேவை. ஒரு நாளுக்கு 8 டம்ளர் அல்லது 2 லிட்டர் தண்ணூர் கட்டாயம் குடிக்க வேண்டும் என்று பலரும் கூறி நாம் கேட்டிருப்போம்.

ஆனால் இது உண்மையா என்பதை மருத்துவரிடம் கேட்டோம். அவர்கள் கூறியதாவது,

ஒரு அளவுகோளோடு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது தேவையில்லை. தாகம் எடுக்கும்போது தண்ணீர் குடித்தால் போதும்.


நம் உடலுக்கு தண்ணீர் தேவைப்படுகிறதா இல்லையா என்பதை நம் சிறுநீரின் நிறத்தை வைத்து அறிந்து கொள்ளலாம்.

சிறுநீர் இளம் மஞ்சள் நிறத்தில் இருந்தால், உடல் நீராகாரத்தோடுதான் இருக்கிறது. மிகவும் அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால், நீர் பற்றாக்குறையாக உள்ளது.

இந்நிலையில் கவலை வேண்டாம். நம் சிறுநீரகம் மூளைக்கு சிக்னல் அளிக்கும். அதன் அடிப்படையில், நாம் தானாகவே தண்ணீர் அருந்துவோம்.

மேலும், இதய நோய் உள்ளவர்கள் அதிக தண்ணீர் பருகினால், அது ஆபத்தாக முடியலாம். எனவே, அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை அறிந்து தண்ணீர் பருகுவோம்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!