கவர்ச்சியான மார்பழகை பெற துடிக்கும் ஆண்களே இது உங்களுக்கு!


உடற் பயிற்சி செய்வதிலும் உடலைக் கட்டுக் கோப்பாக வைத்திருப்பதிலும் அக்கறை காட்டும் ஆண்களே!

உங்கள் மார்புப் பகுதியை ஆண்களுக்கே உரிய வசீகரத்தன்மையுடன் வைத்திருக்க பின்வருவனவற்றை முயற்சியுங்கள்!

சின்-அப்ஸ்

சற்றே உயர்-நிலை உடற் பயிற்சிகளில் ஒன்றான சின்-அப் பயிற்சியை செய்வது கனமான உடல் வாகு கொண்ட மனிதர்களுக்கு கடினமாக இருக்கும். ஆனால்,

இது உடலுக்கு மிகுந்த வலிமை தருவதுடன் உடலை கட்டுக் கோப்பாகவும் வைக்கும். இந்த பயிற்சியை செய்யும் போது மற்றவர்களின் உதவியை நீங்கள் நாடலாம்.

ஒரு உதவியாளர் இருந்தால் அவர் உங்களுடைய முழங் காலை தூக்கிக் கொள்ளச் செய்யலாம்.

உங்களுடைய கைகள் உடல் எடையைத் தாங்கிக் கொள்ளும் அளவிற்கு வலிமை பெற்ற பின்னர், இந்த பயிற்சியை நீங்கள் பிறர் உதவியின்றி செய்யலாம்.


டம் பெல்ப்ளைஸ் :

உங்களுடைய மார்புகளுக்கு ஆண்மைத் தனமான வடிவத்தை அளிக்கும் மற்றுமொரு உடற் பயிற்சியாக டம் பெல் உள்ளது.

இந்த பயிற்சி உங்களுடைய மார்பின் அகலத்தை அதிகப்படுத்தி,

அதை கவர்ச்சியான அம்சமாக்கிவிடும் ஒரு டேபிள் மற்றும் டம் பெல்லை வைத்து இந்த பயிற்சியை செய்யலாம் அல்லது உங்களுடைய சமநிலை தவறாமல் எடையுள்ள பொருள்களை தூக்கலாம்.- ©Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!