இத்தனை நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டதா எப்சம் உப்பு..?


நமது முன்னோர்கள் காலத்தில் இருந்து எப்சம் உப்பினை பல சிகிச்சை முறைகளில் பயன்படுத்தி வருகின்றனர்.

இதில் எண்ணற்ற பல மருத்துவ குணங்கள் உள்ளன.

எப்சம் உப்பின் நன்மைகள்

• சுளுக்கு வலிகளை நீக்கும்.

• தசைப்பிடிப்புக்களை நீக்கும்.

• உடலின் நச்சுத் தன்மையை நீக்கும்.

• இன்சுலீனை அதிகரித்து நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும்.

• எலும்புகளை வலிமைப்படுத்தும்.

• மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

• நாடிகள் கடினமாவதைத் தடுக்கும்

• இரத்தம் கட்டியாவதை தடுக்கும்.

• மூட்டு வலிகளைக் குறைக்கும்

• காயங்களால் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும்.

• தூக்கத்திற்கு உதவும்.


எப்சம் உப்பில் உள்ள மருத்துவக் குணங்கள்

1. காய்ச்சல் மற்றும் இருமலை குணப்படுத்தும்

எப்சம் உப்பை நீரில் கலந்து குளித்து வந்தால் அதில் உள்ள கனியுப்புக்கள் காய்ச்சல், இருமலை குணப்படுத்துகின்றது.

2. தசைப் பிடிப்புக்கள்
குளிக்கும் வாளியில் 2 கப் எப்சம் உப்பை சுடு நீரில் கலந்து 12 நிமிடங்கள் வரை ஊற வைத்தால் தசைப் பிடிப்பு நீங்கும்.

3. மன அழுத்தம்.

குளிக்கும் நீரில் 2 கப் எப்சம் உப்புடன் யூக்லிப்டஸ் எண்ணெய்யை கலந்து வாரத்தில் 3 தடவைகள் குளித்து வந்தால் மன அமைதி ஏற்படும்.

4. முகப்பருக்கள்

எப்சம் உப்பு சருமத் துவாரங்களை சுத்தம் செய்வதுடன் தொற்றுக்களையும், முகப்பருக்களையும் நீக்குகின்றது.

5. சரும வீக்கம்

ஒரு குடுவை சுடுநீரில் எப்சம் உப்பை கலந்து பாதிக்கப்பட்ட இடத்தை கழுவி வருவதனால் வீக்கம் குறையும்.

6. சிராய்ப்புக் காயங்கள்

ஒரு குடுவை நீரில் 2 மேசைக்கரண்டி எப்சம் உப்பை சேர்த்து சிராய்ப்பு காயங்களின் மீது தடவுவதனால் காயங்கள் ஆறும்.

7. கால்களின் ஆரோக்கியத்திற்கு

ஒரு பாத்திரத்தில் ½ கப் எப்சம் உப்பை சேர்த்து கால்களை கழுவிவருவதனால் வலிகள், துர்நாற்றம் நீங்கி பாதம் மென்மையாகும்.- © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!