ஒரே வாரத்தில் சிறுநீரகத்தை சுத்தப்படுத்தும் அற்புதமான 7 இயற்கை மூலிகைகள்..!


சிறுநீரகம் உடலிற்குத் தேவையான முக்கிய தொழிலைச் செய்கின்றது.

இரத்தத்தில் உள்ள கழிவுகளை வடிகட்டி வெளியேற்றுவதுடன் உடலிற்கு தேவையான முக்கியமான ஹார்மோன்களான எரித்ரோப்பொயிட்டின், ரெனின், கல்சிற்ரால் உருவாக்குகின்றது.

சிறுநீரகத்தை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதற்கு தினமும் அதிக அளவு நீரையும், பச்சை இலை வகைகளையும், பழங்களையும் உட்கொள்வது சிறந்தது.

சிறுநீரகம் கழிவுகளை வெளியேற்றுவதுடன் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகின்றது. சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பேணுவதற்கு இயற்கையில் கிடைக்கும் உணவுகள் முக்கியமானவை.


அவைஏழு மூலிகைகள்.

1.பார்ஸலி இலை

பார்ஸலி இலையிலுள்ள apiol, myristicin சிறுநீரை வெளியேற்ற உதவுகின்றது.

சிறுநீரகத்தில் உள்ள நச்சுத்தன்மைகள், மற்றும் தொற்றுக்களை நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றது.

2.டேன்டெலியோன் வேர்

டேண்டெலியோன் வேர்கள் சிறுநீரகம் மற்றும் ஈரலில் உள்ள கழிவுகளை நீக்க உதவுவதுடன் உடலில் தேங்கியுள்ள தேவையற்ற நீர்களையும்வெளியேற்றுகின்றது.

அத்துடன் சிறுநீரகக் குழாயில் ஏற்படும் எரிச்சலையும் குணப்படுத்துகின்றது.

3.மார்க்ஷ்மெல்லோ

மார்க்ஷ்மெல்லோ தாவரத்தில் உள்ள வேர்கள் சிறுநீரகப் பை, சிறுநீரகக் குழாய்களில் ஏற்படும் தொற்றுக்களை நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றது.


4.இஞ்சி

சிறுநீரகத்தை சுத்தப்படுத்தும் சிறந்த மூலிகை இஞ்சி. அத்துடன் உடலில் உள்ள கழிவுகளை நீக்கி ஈரல், சமிபாட்டுத் தொகுதி சிறப்பாக தொழிற்பட உதவுகின்றது.

5.மஞ்சள்
உடலை சுத்தமாக வைத்திருப்பதற்கு மஞ்சள் உதவுகின்றது. அத்துடன் சிறுநீரகத்தில் வீக்கம், தொற்றுக்கள் ஏற்படாமல் பாதுகாக்கும்.

6.செலரி

செலரி உடலிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுப் பொருட்களையும், இரசாயனப் பொருட்களையும் வெளியேற்றுவதுடன் இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சிறுநீரகத்தை சிறப்பாக செயற்பட வைக்கிறது.

தொடர்ச்சியாக உணவில் எடுத்து வருவதனால் சிறுநீரகத்தில் கற்கள், தொற்றுக்கள் ஏற்படாமல் தடுக்கின்றது.


7.சோளம்

சோளம் சிறுநீரகப்பை, குழாய்களில் ஏற்படும் தொற்றுக்கள் மற்றும் சிறுநீரகக் கற்களை குணப்படுத்த உதவுகின்றது.

சிறுநீரகத்தை பாதுகாக்கும் சில வழிமுறைகள்.

•புகைப்பிடித்தல், மதுபானம் அருந்துதலை தவிர்த்தல்.

•அதிக எடை உள்ளவர்களாக இருந்தால் வயதிற்கேற்றவாறு உடல் எடையைக் குறைத்தல் சிறந்தது.

•இரத்த அழுத்தம், குளுக்கோஸின் அளவை சீராக வைத்திருக்க வேண்டும்.

•உடலின் கொழுப்பைக் கட்டுப்படுத்த வேண்டும்.

•தினமும் அதிகளவான நீரை அருந்த வேண்டும்.

•பச்சை காய் மற்றும் இலை வகைகள், பழங்களை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ளுதல் சிறப்பானது.

•பொரித்த உணவு வகைகள், உப்பு போன்றவற்றை தவிர்த்தல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.- © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!