மூக்கொழுகுதல், காய்ச்சல், சைனஸ் தொற்றைக் குணப்படுத்தும் இஞ்சிப் பூண்டு சூப்


குளிர் காலம் வந்ததும் நம் உடலில் காய்ச்சல், இருமல், தும்மல், சைனஸ் என பல தொல்லைகள் ஏற்படுகின்றன.

இந்த பிரச்சினைகளுக்கு நாம் மருந்துகளையே நாடுகின்றோம், அவை உடலிற்கு பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகின்றது.

பல சிகிச்சைகள் செய்தாலும் இந்த தொல்லைகளில் இருந்து முற்றாக விடுதலை கிடைப்பதில்லை.

ஆனால் இயற்கை முறையினால் தீர்வுகள் உள்ளன. அவை உடலிற்கு பக்க விளைவை ஏற்படுத்தாமல் ஆரோக்கியத்தை பேணுகின்றது. சீன மருத்துவ முறையில் குளிர்காலப் பிரச்சினைகளிற்கு இஞ்சியைப் பயன்படுத்துகின்றனர்.

இஞ்சியில் உள்ள சூட்டுத் தன்மை குளிர்காலத்தில் மருந்தாக பயன்படுவதுடன், எலும்பு, மூட்டு வலி, நீர்த்தேக்கம், சிறுநீர் வெளியேற்றல், வீக்கம், மூக்கொழுகுதல் போன்ற பிரச்சினைகளிற்கும் தீர்வைத் தருகின்றது.


சுவையான இஞ்சிப் பூண்டு சூப்

தேவையான சேர்மானங்கள்.

• 1-2 அங்குல இஞ்சித் துண்டு – வெட்டியது.

• சிக்கன் எலும்புக்குழம்பு – 6 கப்

• வெட்டிய பச்சை வெங்காயம் – 4

• வெட்டிய பூண்டுத் துண்டு – 2

• காளான் – தேவையான அளவு

தயாரிக்கும் முறை

ஒரு பானையில் இஞ்சி, வெங்காயம், பூண்டு, காளானை எடுத்து, அதில் குழம்பை சிறிதளவு போட்டு ஊற வைக்க வேண்டும்.

சேர்மானங்கள் மென்மையானதும் அதில் மீதமுள்ள குழம்பையும் சேர்த்து 20-30 நிமிடங்கள் கொதிக்க வைத்தால் சுவையான சூப் தாயாராகும்.
இதனை 3-4 நாட்கள் குளிரூட்டியில் வைத்து பயன்படுத்தலாம்.

சிக்கன் எலும்பு குழம்பு

சிக்கன் எலும்புகளை சூடாக்கி பானையில் எடுத்துக் கொள்ளவும். அதில் ஆப்பிள் சிடர் விநாகிரி மற்றும் நீரைச் சேர்த்து பானைய மூடி 24 மணி நேரம் ஊற விடவும்.

ஊறிய பின்பு எண்ணெய் மற்றும் கொழுப்பை அகற்றி கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டு குளிரூட்டியில் வைக்கவும்.

நீங்கள் சைவத்தை மட்டும் உண்பவர்களாக இருந்தால் காய் வகைகளை சேர்த்து 8-10 மணி நேரம் ஊற வைத்து, குளிரூட்டியில் வைத்து பயன்படுத்த முடியும்.


இஞ்சி

இஞ்சியில் இயற்கையாகவே பல மருத்துவ குணங்கள் உள்ளன. இது வயிற்றுக் கோளாறு, சமிபாடு, வாந்தி, குளிர், இருமல், பசி போன்ற பிரச்சினைகளிற்கு தீர்வைத் தருகின்றது.

பூண்டு

பூண்டு பக்டீரியாத் தொற்றுக்களை நீக்கி , நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகின்றது.


பச்சை வெங்காயம்

பச்சை வெங்காயம் உடம்பை குளிரில் இருந்து பாதுகாப்பதுடன், இஞ்சியுடன் சேர்ந்து பல நன்மைகளைச் செய்கின்றது.- © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!