தையிரோயிட் குறைபாடுள்ளவர்கள் பின்பற்ற வேண்டிய இயற்கை சிகிச்சை முறைகள்..!


தையிரோயிட் நம் உடலில் உள்ள ஹார்மோன்களில் முக்கியமானது. இதன் அளவு குறைவது அல்லது அதிகம் அடைவதனால் உடலில் பல பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.

தையிரோயிட் சுரப்பியில் ஹார்மோன் அளவு குறைவாக சுரப்பதனால் ஹைபோ தையிரோயிடிசம் (Hypothyroidism) ஏற்படுகின்றது.

ஆனால் இதனை குணப்படுத்த இயற்கையான வழி முறைகள் பல உள்ளன. உணவுப் பழக்கவழக்கங்களை மாற்றுவதன் மூலம் தையிரோயிட்டின் அளவை அதிகரிக்க முடியும்.

இயற்கை சிகிச்சை முறைகள்

(1) குறைந்தளவு மாப்பொருட்களை எடுத்துக் கொள்ளுதல்

அதிகமான மாப்பொருட்களை உட்கொள்வதால் தையிரோயிட் மற்றும் estrogen அளவு குறைவடைகின்றது. இதனால் மாப்பொருட்கள், சர்க்கரையை தவிர்த்து கொழுப்பு உணவுகளை உட் கொள்ளவும்.

(2) குளுட்டன் மற்றும் கேசினை தவிர்த்தல்

கோதுமை மற்றும் பால் உணவு வகைகளில் குளுட்டன், கேசின்எனும் புரதங்கள் அதிகம் உள்ளதால் தையிரோயிட் சுரப்பியின் தொழிற்பாட்டை பாதிப்பதுடன், சுரப்பியில் வீக்கத்தையும் ஏற்படுத்துகின்றது.

(3) செலினியம்

செலினியம் நிறைந்த உணவுகளான காளான், Brazil nut, சூரியகாந்தி விதை உட்கொள்வதனால் தையிரோயிட் அளவை அதிகரிக்கும்.

(4) உணவு நிரப்பிகள்

தையிரோயிட் சுரப்பியின் தொழிலை அதிகப்படுத்தும் மூலிகையான துளசி, அஸ்வகந்தாவை எடுத்துக் கொள்ளுதல் சிறப்பு.


(5) BPA தவிர்த்தல்

BPA (BISPHENOL A) அதிகளவு பிளாஸ்டிக் பொருட்களில் உள்ளன.

இவை நாளமில்ல சுரப்பிகளை (endocrine system) பாதிக்கின்றது.எனவே பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து கண்ணாடி மற்றும் அலுமினியப் பாத்திரங்களில் உணவு மற்றும் நீர்களை வைத்திருப்பது சிறந்தது.

(6) உடலில் அயோடின் அளவை சரிபார்த்தல்

அயோடின் அளவு குறைவடைவதனால் ஹைபோ தைய்ரோட்டிசம் ஏற்படுகின்றது.அயோடின் நிறைந்த உணவை உட்கொள்வதால் தீர்வைப் பெற முடியும்.

(7) கன உலோகத்தை தவிர்த்தல்

கன உலோகத்தினால் ஏற்படும் பாதிப்பை மஞ்சள்,பச்சை பாசி,கொத்தமல்லி உட்கொள்வதால் குணப்படுத்த முடியும்.

(8) பற் சிகிச்சை

பற் சிகிச்சையின் போது silver filling தவிர்த்து amalgam filling பயன்படுத்துவது சிறந்தது.- © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!