இஞ்சியுடன் தேனைக் கலந்து குடிப்பதனால் என்ன நன்மை தெரியுமா..?


இஞ்சி ஒவ்வொருவரது வீட்டு சமையலறையிலும் முக்கியம் இடம் பெற்று வருகின்றது.

இஞ்சி உணவுகளில் சுவையூட்டியாக இருப்பதுடன், பல மருத்துவ குணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

நம் ஊர் சமையலறையில் மட்டுமன்றி மேற்கத்தேய சமையலிலும் உணவுகளின் சுவைக்காக இஞ்சியைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இயற்கை மருத்துவ முறையிலும் இஞ்சி தனக்கென தனி இடத்தை வகித்துள்ளது.

 இஞ்சியின் மருத்துவ குணங்கள்

(1) சமிபாட்டை அதிகப்படுத்தும்.

அவித்த இஞ்சித் துண்டை அரைத்து தேனில் கலந்து சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறுகள் நீங்கி சமிபாட்டை சீராக்குகின்றது. இஞ்சியின் காரத்தை குறைப்பத்ற்கு தேனை பயன்படுத்துகின்றோம்.


(2) வாந்தியை குணப்படுத்தும்.

சிலருக்கு காலை வேளையில் வாந்தி வருவதுண்டு. தினமும் இஞ்சியை பாணமாக அருந்தி வந்தால் குறுகியகாலத்தில் வாந்தி பிரச்சினை தீர்ந்து விடும்.

(3) இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்

இஞ்சி நமது இரத்த நாடிகளின் நச்சுத் தன்மையை நீக்கி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கின்றது. சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட 50g இஞ்சியை 5 லீட்டர் கொதித்த நீரில் போட்டு குளித்தால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.


(4) தொண்டை வலி இருமலை குணப்படுத்தும்

சிறிய துண்டுகளாக வெட்டிய இஞ்சியயை சுடு நீரில் போட்டு, அத்துடன் தேன், எலுமிச்சபழச் சாறு சிறிதளவு சேர்த்துக் குடித்தால் இருமல் தொண்டை வலி நீங்கும்.

(5) வீக்கத்தை குறைக்கின்றது

வாதம், தசைப் பிடிப்புகளினால் ஏற்படும் வீக்கத்தை இலகுவாக குணப்படுத்துகின்றது. இவை அல்சைமர், நீரிழிவு, உடல் போன்ற பிரச்சினைகளில் இருந்தும் தீர்வைத் தருகின்றது.

(6) தலை வலியை நீக்கும்
சிறிதளவு மிளகு, வெட்டப்பட்ட இஞ்சித் துண்டுகளுடன் ஒரு மேசைக் கரண்டி காய்ந்த புதினாவை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். இதில் தேனைக் கலந்து குடிப்பதனால் தலை வலி நீங்கும்.

(7) வயிற்றெரிச்சலை குணப்படுத்தும்

வயிற்றெரிச்சலுக்கு பயன்படுத்தும் மருந்துகளை விட இஞ்சி ஆறு மடங்கு அதிக தீர்வைத் தருகின்றது. அத்துடன் வயிற்றெரிச்சல் வராமல் தடுக்கின்றது.- © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!