நாக்குக்கு கீழ் இந்த 2 பொருளை வைத்து உறங்கினால் உடலில் நடக்கும் அற்புதம்..!!


உறக்கமின்மை / தூக்கமின்மையால் நாம் அதிகமாக பாதிக்கப்படுகிறோம் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். ஆனால், தூக்கமின்மை பிரச்சனையில் எத்தனை வகைகள் இருக்கின்றன என்பது நாம் அறிந்திராத ஒன்று.
ஆம், எல்லாருக்கும் ஒரே மாதிரியான தூக்கமின்மை கோளாறு உண்டாவதில்லை. மன அழுத்தம், பதட்டம், கவலை, வேலைப்பளு, உடல்நல / மனநல பிரச்சனைகள் என பல காரணத்தால் தூக்கமின்மை உண்டாகிறது.
நல்ல உறக்கத்திற்கு தேவை மன அமைதி, நிம்மதி. சரியாக தூக்கம் வரவில்லை என்பதற்காக மாத்திரை உட்கொள்வது ஒருபோதும் சரியான தீர்வை அளிக்காது…


மருத்துவ நிபுணர்கள்!
நாம் இதயம், இரத்த அழுத்தம், வலி நிவாரணி, ஆண்டி- ஹிசுட்டமின் போன்ற மருந்துகள் உட்கொள்வதினால் கூட தூக்கமின்மை உண்டாகலாம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.


மாத்திரைகள்!
சில வகை மாத்திரைகள் மயக்கமான நிலை உண்டாக்கி உறங்க வைக்கும். ஆனால், நாள்பட அவை உங்கள் வயிரின் ஆரோக்கியத்தை சீர்குலைக்கும் என்பதை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.


சராசரியாக எவ்வளவு நேர தூக்கம் தேவை?
குடிப்பது, புகைப்பது, கண்ட உணவை உண்பது போன்றவை ஏதேனும் ஒருசில உடல் பாகங்களை தான் பாதிக்கும்.
ஆனால், நீங்கள் சரியாக தூங்காமல் போவதால், உறக்கமின்மை காரணத்தால் ஒட்டுமொத்த உடலின் செயற்திறன் குறையும் அபாயம் உண்டாகும். இது உடல்நலம், மனநலம் என இரண்டையும் பாதிக்கும் தன்மை கொண்டுள்ளது


நேரம்!
இரவு 9 மணியிலிருந்து – அதிகாலை 4 மணிவரை என ஏறத்தாழ 6 – 7 மணி நேர உறக்கம் மக்களுக்கு மிகவும் அவசியமானது. யாரொருவர் இந்த நேரத்தில், இந்த தூக்க சுழற்சியை சரியாக பின்பற்றுகிறாரோ, அவரது ஆரோக்கியம் பெரிதாக சோர்வடைய வாய்ப்புகள் குறைவு என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.


சர்க்கரை – உப்பு!
சரி, இந்த தூக்கமின்மை பிரச்சனையை சரிசெய்ய உப்பு, சர்க்கரை எப்படி உதவுகிறது என இனி பார்க்கலாம்…
தேவையான பொருட்கள்:
ஒரு டேபிள்ஸ்பூன் – தூய்மையாக்கப்படாத கடல் உப்பு
5 டீஸ்பூன் – கரும்பு சர்க்கரை


எப்படி பயன்படுத்துவது?
இதை பயன்படுத்தும் முறை மிகவும் எளிமையானது. ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு மற்றும் ஐந்து டீஸ்பூன் கரும்பு சர்க்கரையை ஒன்றாக கலந்து, அதிலிருந்து அரை டீஸ்பூன் கலவையை உறங்குவதற்கு முன்னர் உங்கள் நாக்குக்கு அடி பாகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.


பக்கவிளைவுகள் இல்லை!
மேலும், இது வேகமாக கரைந்துவிடும். இவ்வாறு செய்வதால் உங்களது தூக்கமின்மை பிரச்சனையை எளிய முறையில் சரி செய்யலாம்.
உப்பு, சர்க்கரை இரண்டும் இயற்கை பொருட்கள் என்பதால் எந்தவித பக்கவிளைவுகளும் உண்டாகாது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!