தோட்டத்தில் கிருமி நாசினியாக வினாகிரியை பயன்படுத்தும் 12 வழிமுறைகள்..!


வினாகிரி உங்களின் பல தேவைகளில் பளன்படுத்தப்படுகின்றது. இவை சமையலறையில் எவ்வாறு பயன்படுமோ அவ்வாறே தான் நாம் எமது வீட்டு தோட்டத்திலும் பயன்படுத்தலாம்.

வணிகம் நோக்கம் அடிப்படையில் வியாபாரிகளால் இரசாயணம் கலந்து உருவாக்கப்படும் வினாகிரி விலைக்கூடியது மாத்திரமல்லாது எமது உடலிற்கும் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது.

எவ்வாறிருப்பினும் இவ்வினாகிரியானது சூழல் ரீதியான நல்ல உறவினையே கொண்டுள்ளமை சிறப்பானது.

உங்கள் தோட்டத்தில் வினாகிரியை பயன்படுத்தும் 12 வழிமுறைகளை பின்வருமாறு அறியலாம்

•1.களைகளை அகற்றல்

நீங்கள் உங்களது தோட்டத்தில் களைகளை அகற்ற விரும்பினால் ஒரு கப் உப்பு, ஒரு மேசைக்கரண்டி எலும்மிச்சை சாறு 5 சதவீத வெள்ளை வினாகிரி போன்றவற்றை நன்றாக கலந்து ஒரு போத்தலில் இட்டு களைகளுக்கு தெளிக்கலாம்.

• 2.பூனைகள் மற்றும் பூச்சிகளை அகற்றல்

நீங்கள் சிறிதளவு வெள்ளை வினாகிரியை உங்களின் தோட்டத்தை சுற்றி தெளித்தால் அதன் நாற்றமானது தோட்டத்தை நோக்கி வரும் புனை,நாய்,முயல் மற்றும் கொறித்துண்ணிகள் அணுகாமல் பாதுகாக்கும்.

காரணம் அந்த நாற்றமானது இந்த மிருகங்களுக்கு பிடிக்காதவையாகும். அதேப்போல் உங்களது பாவனையற்ற துணி மற்றும் உடைகளை வினாகிரியில் ஊற வைத்து, அவற்றினை தோட்டத்தினை சுற்றி தொங்கவிடுவதன் மூலமும் இவற்றை தடுக்கலாம்.

• 3.எறும்புகளை தவிர்க்கலாம்
வினாகிரியினை போத்தலில் இட்டு அதனை வீட்டினை சுற்றி தெளித்தால் எறும்பினை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு தொடர்ந்து செய்வதால் முற்றுமுழுதாக எறுப்பினை இல்லாமாக்கலாம்.

• 4.வெட்டிய பூக்களின் ஆயுளை அதிகரிக்கலாம்
வெட்டிய பூக்கள் வாடாமல் அதன் ஆயள் நீடிப்பதற்கு அதற்கு தேவையான எல்லா கனிப்பொருட்களை சேர்ப்பது மாத்திரமல்லாமல் அதனோடு 2 கரண்டி வினாகிரியை பூச்செண்டினில் இடுங்கள் மற்றும் 1 கரண்டி சீனியும் சேர்க்க வேண்டும்.

இந்த கலவையை ஒவ்வொரு 3தொடக்கம் 5 நாட்களுக்கு மாற்றுவதை மறக்கவும் வேண்டாம்.


• 5. தோட்டத்தில் உள்ள பூச்சிகளை அகற்றலாம்

ஒரு போத்தல் தெளிப்பானில் 3 பகுதி நீரை கலக்க வேண்டும், பாத்திரம் கழுவும் பொருள் 1 மேசை கரண்டி மற்றும் 1 பகுதி வினாகிரியையும் சேர்க்க வேண்டும். இத்திரவத்தை தோட்டம் முழுவதும் தெளிக்க வேண்டும்.

• 6.தோட்ட உபகரணங்களின் துருவை அகற்றலாம்

தோட்ட உபகரணங்களில் படிந்துள்ள துருவை அகற்றுவதற்கு வினாகிரியை பயன்படுத்தலாம். இது அந்த துருவினை அகற்றி உபகரணங்களை முற்றாக சுத்தமாக்கும்.

• 7. களிமன் தொட்டியை சுத்தப்படுத்தலாம்

களிமன் தொட்டிகள் உங்கள் தோட்டத்தில் கவர்ச்சியாக இருந்தாலும் அவை கோடை காலத்தில் மண்ணின் ஈரப்பதத்தினையும் வேர்களையும் பாதுகாக்கும். மற்றும் அவை தண்ணீரில் இருந்து உப்பு , கனியுப்பினை உறிஞ்சி வைத்து கொள்ளும்.

இதன் போது படியும் கழிவினை போக்க 5 சதவீத வினாகிரியினை எடுக்க வேண்டும். பின், அதனோடு 3 – 4 கின்னம் நீரை சேர்த்து களிமண் தொட்டியில் இட வேண்டும். பின் அதனை அரை மணித்தியாலம் அவ்வாறே வைத்திருக்க வேண்டும். இறுதியில் வினாகிரியுடன் நீக்கவேண்டிய படிவுகளை துடைக்க வேண்டும்.

• 8.பழங்களை மொய்க்கும் ஈக்களை தவிர்க்கலாம்

பழங்களில் ஈக்கள் மொய்ப்பதை தவிர்ப்பதற்கு நீங்கள் அரைவாசி சீனி , வெல்ல பாகு ஒரு கரண்டி, அப்பில் சீடர் ஒரு கின்னம் மற்றும் நீர் ஒரு கின்னம் போன்ற பொருட்களை நன்றாக கலக்க வேண்டும்.

அடுத்ததாக ஒரு பொருத்தமான கொள்கலனில் பழங்கள் உள்ள மரத்தில் தொங்கவிட வேண்டும். உடனடியாக பழ ஈக்கள் அந்த கலவையை தாக்க முற்படும் போது அவை அக்கலனில் சிக்கக்கொள்ளும்.

• 9.களைகளை அழிக்கலாம்

நீங்கள் செல்லும் நடை பாதையில் அல்லது சுவரில் களைகள் பெருகியிருந்தால் அவற்றை அழிக்க வினாகிரியை பயன்படுத்தலாம். எப்படி இருப்பினும், இச்செய்முறை உங்களின் முழு தோட்டத்தின் அழகையும் மேம்படுத்தும் என்பது சிறப்பானதாகும்.

• 10. பங்கசு (பூஞ்சனத்தை அழிக்கலாம்)

பங்கசு அல்லது பூஞ்சனமானது நீங்கள் வளர்க்கும் தாவரங்களின் வளர்ச்சியை தடுக்கலாம். அத்தோடு தண்டுகள் மற்றும் இலைகளில் கறுப்பு புள்ளிகளும் படும் , இந்த பிரச்சினையிலிருந்து வினாகிரி
நமக்கு பிரதானமாக உதவுகிறது.

இவற்றிற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் தெமோமில் தேயிலை கசாயத்துடன் 2 கரண்டி வினாகிரி சேர்த்து கலக்க வேண்டும்.

இப்பொழுது இந்த கலவையை போத்தலில் ஊற்றி பூஞ்சனம் கொண்ட தாவரத்தில் தெளித்தல் வேண்டும்.
இம்முறை தாவரத்தின் வளர்ச்சிக்கு உதவுவதோடு சிறந்த, செயற்றிறன் மிக்க முறையாகவும் அமையும்.

ஒரு வேளை நீங்கள் ரோஜா செடி வளர்த்தால் அதற்கு 3 கரண்டி அப்பில் சீடர் வினாகிரியோடு 4 லீற்றர் நீரில் கலந்து அவற்றிற்கு தெளிக்கலாம்.

• 11.நத்தைகளை அழிக்கலாம்

நீங்கள் அப்பிள் சாறு வினாகிரியை பயன்படுத்துவதன் மூலம் நத்தைகள் வருவதனை தடுக்க முடியும்.

• 12. ரோடோடென்டான்ஸ்கள், அஜீலாக்கள் போன்றவற்றின் கலங்களை புதுப்பித்து வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமானால் நீங்கள்வ வினாகிரி கலந்த நீரை அவற்றிற்கு ஊற்ற வேண்டும். – © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!