மூட்டு வலியை ஒரு மணி நேரத்தில் குறைக்க உதவும் அற்புதமான இலை..!


முட்டைக்கோஸ் பல நம்ப முடியாத நன்மைகளைக் கொண்ட ஆரோக்கியமான காய்கறி. இது பிராஸிக்கா குடும்பத்தைச் சேர்ந்தது.

முட்டைக்கோஸ் வட்டம் மற்றும் கோள வடிவங்களில், மென்மையான இளம்பச்சை, வெள்ளை நிற இலைகளைக் கொண்டுள்ளது.

ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை செய்வதுடன், இதில் உள்ள ஆண்டிஒக்சிடன்ட் தன்மை நமது சருமத்தைபாதுகாக்க உதவுகின்றது.

மேலும் இதில் உள்ள விட்டமின், இரும்புச்சத்து, பொட்டாசியம் செறிந்த்ள்ளதால், இவை மேற்கத்தேய உணவுகளிலும், நம் ஊர் உணவுகளிலும் அதிகமாக சேர்க்கப்படுகின்றது.

முட்டைக்கோஸ் இரத்தம், ஈரல் நச்சுத்தன்மை அடையாமல் பாத்காக்கப்படுவதுடன், கீல்வாதம்(ARTHIRITIS) க்குணமடைய உதவுவதுடன், உடலில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற உதவுகின்றது.

முட்டைக்கோஸை உணவில் சேர்த்துக் கொள்வதால், சருமம் புத்துணச்ர்ச்சி பெறுகின்றது. மேலும் சரும எரிச்சல், முகப்பரு, சிரங்கு, சொரியாஸிஸ், கால்புண்கள், சருமம் சிவத்தல் குணமடைவதற்கு உதவுகின்றது.

இதில் உள்ள விட்டமின் சி சருமப் புஇத்துணச்ர்ச்சிக்கு உதவுவதுடன், சருமம் முதிர்வடைவதைக் குறைக்கின்றது.

முட்டைக்கோஸில் உள்ள விட்டமின் ஏ மற்றும் டி சருமத்தின் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றது. UV கதிர் வீச்சுக்களி்னால் சருமம் பாத்ப்படைவதைத் தடுக்கின்றது.

முட்டைக்கோஸின் வகைகள்.

(1) பச்சை முட்டைக்கோஸ்.

விட்டமின், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இவ் வகையானது எல்லா இடங்களிலும் கிடைக்கின்றது. இவை அதிகமான உணவு வகைகள், சலாட் போன்றவற்றில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது.


(2) சிவப்பு முட்டைக்கோஸ்

சிவப்பு அல்லது ஊதா நிற முட்டைக்கோஸ் மிக அடர்த்தியானதும், மிளகு சுவை கொண்டுள்ளது. இதில் பச்சை நிறத்தை விட அதிகமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

(3) முட்டைக்கோஸ் (Savoy cabbage)

இது அடர்த்தியாக பெரிய இலைகளைக் கொண்டுள்ளது. இவை வெளிர் மற்றும் இளம் பச்சை நிறத்தில் காணப்படும். இந்த இலைகளை இலகுவாகச் சுற்றிக் கட்ட முடியும்.

(4) போக் சோய்

சீன முட்டைக்கோஸ், இளம் பச்சை நிறத்தில் நீள் வட்ட வடிவில் இலைகள் காணப்பட்ம். இந்த இலைகளில் வெள்ளை நிற தண்டுகள் காணப்படும்.

இந்த முட்டைக்கோஸின் வெளிப்புற இலையை எடுத்து நன்றாக கழுவி உலர வைக்க வேண்டும்.

அதில் காணப்படும் பெரிய தண்டுகளை நீக்க வேண்டும். சிறிய உருளையினால் இலையின் மேல் உருட்டும் போது அதில் உள்ள சாறுகள் வெளியேறும்.

அலுமினியப் பேப்பரில் இலையைச் சுற்றி, மின்னடுப்பில் (OVEN) சிறிது நேரம் சூடாக்க வேண்டும். பின்னர் பாதிக்கப்பட்ட இடத்தில் இந்த இலையை வைத்து சுற்றி துணியால் கட்ட வேண்டும்.

அல்லது நீங்கள் இலையை குளிரூட்டியில் வைத்து பின்னர் அதை வலி உள்ள இடத்தில் வைத்து துணியால் கட்ட வேண்டும்.- © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!