தற்போது இருக்கும் கால கட்டத்தில், குடும்ப சூழல், அலுவலகம் போன்றவற்றினால் ஏற்படும் மன அழுத்தத்தின் காரணமாக, இரவில் படுத்தவுடன் உறக்கம் வராமல் தவிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது.
அதே நேரத்தில் சிலருக்கு, இரவு தூக்கத்தின் போது இடையில் கண் விழிப்பு ஏற்படும்.
அந்த நேரத்தில் கூட… செல்போனில் கேம் விளையாடுவதும், சோசியல் மீடியாவில் உலவுவதுமாக இருப்பார்கள்.
இது மாதிரி இரவு நேரங்களில் தூங்காமல் இருப்பதும், இடையில் விழிப்பதும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
ஏனெனில், இரவில் மட்டுமே சுரக்கும் “மெலடோனின்” என்ற வேதிப்பொருள் இரவில் கண் விழித்தால் சுரக்காது என்று அவர்கள் கூறுகின்றனர்.
நமது மூளையில் உள்ள “பினியல்” சுரப்பி சுரக்கும் போது, இந்த மெலடோனின், சுரக்காமல் போனால், நம் உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியமும் கெட்டுப் போகும்.
அதோடு மட்டுமில்லாமல், நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும்.
இரவில் கண் விழிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்:-
இரவு நேரத்தில் தொடர்ந்து கண் விழிப்பதால், நம் உடலில் ஓய்வாக உள்ள கல்லீரலின் ஆரோக்கியம் பாதிப்படையும்.
அதனோடு, கண்கள் மற்றும் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் கெடும்.
இரவில் தூக்கத்தை தொலைப்பவர்களுக்கு, நரம்புத் தளர்ச்சி, தோல் சுருக்கம், மன அழுத்தம், எதிர்மறையான எண்ணங்கள், ஆண்மைக் குறைவு, கல்லீரல் பிரச்சனை ஆகிய நோய்களின் தீவிரம் அதிகமாகும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!