தொண்டைப் புண்ணால் அவதிப்படுபவர்கள் அன்னாசிப்பழச் சாறு குடிக்கலாமா..?


இன்றைக்குப் பலரையும் பாடாப்படுத்தி வரும் ஒற்றைத் தலைவலி எனப்படும் ஒருபக்க தலைவலியைக் குணப்படுத்த அன்னாசிப்பழத்துடன் தேன் சேர்த்து 40 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நிவாரணம் கிடைக்கும்.

100 கிராம் அன்னாசிப்பழத்தில் 88 சதவிகிதம் ஈரப்பதமும், 0.5 சதவிகிதம் புரதமும், 10.8 சதவிகிதம் மாவுச்சத்தும் 17 சதவிகிதம் கொழுப்புச்சத்தும் 63 மில்லி கிராம் வைட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தயாமின் ஆகிய தாது உப்புகளும் நிறைந்துள்ளன.

சிலருக்கு நிற்காமல் தொடர்ந்து விக்கல் வந்துகொண்டே இருக்கும். அப்படிப்பட்டவர்கள் ஒரு சங்கு (பாலாடை) அளவுக்கு அன்னாசிப்பழச் சாற்றில் சர்க்கரை சேர்த்து அருந்தினால் குணமாகும். மலச்சிக்கல் தீர இதே கலவையை இரண்டு மடங்கு அதிகமாக அருந்தினால் பிரச்னை நீங்கும்.


தொண்டைப் புண், தொண்டையில் சதை வளர்ச்சி, நல்ல குரல் வளம் பெற விரும்புவோருக்கு அன்னாசிப்பழச் சாறு பலனளிக்கும். இந்தச் சாற்றால் வாய் கொப்புளித்தால் தொண்டை அழற்சியிலிருந்து விடுபடலாம்.

மஞ்சள்காமாலை, வயிற்றுவலி, இதய வலி போன்றவற்றையும் குணப்படுத்தும் தன்மை இந்தப் பழத்துக்கு உண்டு. மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் இதன் சாற்றை அருந்தி வந்தால் சீக்கிரம் குணமடைவார்கள்.

அன்னாசிப் பழத்தை (பாதி அளவு) எடுத்து, சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு டீஸ்பூன் ஓமத்தைப் பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளற வேண்டும். அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவைத்து இறக்கி, சூடு ஆறியதும் மூடிவைக்க வேண்டும்.


இரவில் இப்படிச் செய்த அந்தக் கலவையை மறுநாள் காலை வெளியே எடுத்து நன்றாகப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து 10 நாள்கள் குடித்து வந்தால் தொப்பை குறைந்துவிடும்.

தீமைகள்:

அன்னாச்சி பழம் இயற்கை சர்க்கரையை கொண்டிருப்பதால், சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. மேலும், இன்சுலின் அளவை அதிகரித்துவிடும் என்பதால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆன்டிபயாடிக், வலிப்புத் தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்துவோர் இதைச் சாப்பிடாமல் இருப்பது நல்லது.


கருச்சிதைவை ஏற்படுத்தும் என்பதால், கருத்தரித்த ஆரம்ப நாள்களில் இதைச் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இந்தப் பழம் குடல், இரைப்பைக்குள் செல்லும்போது ஆல்கஹாலாக மாறி, கீல் வாதத்தை தூண்டிவிடும்.

எனவே, கீல்வாதம் மற்றும் முடக்கு வாதம் உள்ளவர்கள் இதை அதிகம் சாப்பிடாமல் இருப்பது நல்லது. மேலும் பழுக்காத அன்னாசியைச் சாப்பிட்டால், அது நச்சாக மாறிவிடும். எனவே, அதைத் தவிர்ப்பது நல்லது.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!