“அந்த” விஷயத்துக்காக 20 ஆண்டுகளாக விற்பனையாகும் வயாகரா மாத்திரைகள்..!


ஆண்மைக்குறைவை நிவர்த்தி செய்யும் ‘வயாகரா’ என்ற மாத்திரை தற்போது உலகம் முழுவதும் கோடிக் கணக்கில் விற்பனையாகி சாதனை படைத்து வருகிறது.

கடந்த 1990-ம் ஆண்டுகளில் இம்மாத்திரை பி‌ஷன் குழுவினரால் பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகு தயாரானது. தொடக்கத்தில் மார்பு தொற்றுநோய்க்காக கண்டு பிடிக்கப்பட்ட இம்மாத்திரைக்கு சில் டெனால்பில் என பெயரிடப்பட்டது.

மார்பு தொற்று காரணமாக ஏற்படும் தொண்டை வலிக்காக பயன்படுத்தப்பட்ட இந்த மாத்திரைகள் எதிர்பாராதவிதமாக ஆண்களுக்கு ‘செக்ஸ்’ உணர்வை அதிகரித்து பக்க விளைவை ஏற்படுத்தியது.

இதன்மூலம் பல ஆண்களின் ‘செக்ஸ்’ உறவு மேம்பட்டது. அதைத் தொடர்ந்து 40 வயதுக்கு மேல் ஆண்மைக் குறைவு ஏற்படும் ஆண்களின் குறையை போக்கும் வகையில் இந்த மாத்திரை மாற்றி அமைக்கப்பட்டது.

பின்னர் அது நீல நிறத்தில் மாற்றப்பட்டு ‘வயாகரா’ என பெயரிடப்பட்டது. அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக முகமையின் பல்வேறு பரிசோதனைக்கு பிறகு 1998-ம் ஆண்டு மார்ச் 27-ந் தேதி ‘வயாகரா’ மாத்திரை விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டது.

விற்பனை தொடங்கிய ஒரு வாரத்தில் அமெரிக்காவில் மட்டும் 1,50,000 பேர் பயன்படுத்தினர். பிறகு அது வெளிநாடுகளில் விற்பனையை தொடங்கியது.

கடந்த 20 ஆண்டுகளாக பல கோடி மாத்திரைகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளன. இந்த மாத்திரை தயாரிக்கும் கம்பெனி ஆண்டுக்கு ரூ.650 கோடி வருமானம் ஈட்டி வருகிறது.-
Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!