இலங்கைக்கும் ,இந்தியாவுக்கும் காத்திருக்கும் பேரதிர்ச்சி..! ஆய்வில் வெளியாகிய தகவல்..!


உலகத்தில் ஆபத்தினை சந்திக்கப்போகும் நாடுகளில் இலங்கையும் இடம்பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக காலநிலை மாற்றத்தில் அதிகமாக பாதிக்கப்படும் நாடுகளிலேயே இலங்கை இடம்பிடித்துள்ளது. இதன்படி பத்து நாடுகளுள் ஒன்றாக இலங்கையும் காணப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அபிவிருத்தி, வளர்ச்சி ஆகியவற்றை மையப்படுத்திய 67 நாடுகளைத் தெரிவு செய்து மேற்கொள்ளப்பட்ட ஆய்விற்கமைய இந்த தகவல் வெளியாகியுள்ளது.


இந்த நிலையில், புவி வெப்பமடைதலினால் மழை குறைவடைதல், அகோரக் காற்று வீசுதல், பெரு வெள்ளம் போடுதல் போன்ற காலநிலைகள் இலகுவாக ஏற்பட கூடும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலக சனத்தொகையில் நூற்றுக்கு 80 வீதமானவர்கள் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியாளர்கள் 94 வீதமானோர் ஆகியோர் குறித்த 67 நாடுகளில் பிரதிநிதித்துப்படுகின்றதாக அந்த அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது.

இந்த ஆய்விற்கமைய காலநிலை மாற்றத்தினால் அதிக பாதிப்பிற்குள்ளாகும் நாடாக இந்தியா முதல் இடம்பிடித்துள்ளதுடன் பிலிபைன்ஸ் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் அதற்கு அடுத்த இடத்தில் பெயரிடப்பட்டுள்ளன.-Source: news.ibctamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!