விமானத்தின் கதவை திறந்த போது இளம் பெண்ணுக்கு நடந்த பயங்கரம்..!


உகாண்டாவில் விமானத்தின் அவசர கால கதவை பணிப் பெண் திறந்து பார்த்த போது, அவர் பரிதாபமாக கீழே விழுந்து இறந்துள்ளார்.

உகாண்டாவின் Entebbe சர்வதேச விமானநிலையத்திலிருந்து கடந்த புதன் கிழமை பிற்பகல் EK729 என்ற விமானம் துபாய் செல்வதற்கு பயணிகள் ஏறிய பின் புறப்பட தயாராக இருந்துள்ளது.

அப்போது விமானப் பணிப் பெண் ஒருவர் விமானத்தின் அவசர கால கதவை திறந்து பார்த்து சோதித்த போது, எதிர்பாரதவிதமாக கீழே விழுந்துள்ளார்.

கீழே விழுந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால் தலையில் பலமாக அடிபட்டதால், அவர் முன்னரே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதைக் கண்ட பயணி ஒருவர், விமானத்தின் கதவை திறந்து பார்த்த போது கீழே விழுந்தார். சுமார் அது 60 அடி உயரம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்

உயிரிழந்த பணி பெண்ணின் குடும்பத்திற்கு உரிய உதவிகள் செய்யப்படும் என்றும், அதுமட்டுமின்றி இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.-
Source: news.lankasri

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!