வாரம் ஒரு முறை பாதங்கள் இப்படி பராமரித்தால் பார்லர் போகவே தேவையில்ல..!


பாதங்கள் நன்றாக இருந்தால் தான் நாம் தங்கு தடையின்றி நடந்து செல்ல முடியும். எம்மில் பலர் முகத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பாதங்களுக்கு கொடுப்பதில்லை.

சொல்லப்போனால் பாதங்களை கண்டு கொள்வதே இல்லை.

ஆனால் நாம் பாதங்களை கட்டாயம் கவனிக்க வேண்டும். இப்போது நாம் விடும் தவறுகள் காலப்போக்கில் பெரும் வினையாக மாறி விடுவதுண்டு.

இதை நாம் வீட்டிலிருந்தே எவ்வாறு செய்வது எனப் பார்ப்போம்.

01. வாரம் ஒரு முறை பாத நகங்களை நன்றாக வெட்டி, சுத்தம் செய்யவேண்டும். ஊசியால் நகங்களை சுத்தம் செய்வதைத் தவிர்க்கவும்.

02. மென்மையான தோலில் தயாரிக்கப்பட்ட செருப்புகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.


03. கால் விரல் நகத்தின் ஓரத்தில் கல், மண் படிந்துவிட்டால், நல்லெண்ணெய் தோய்த்தத் திரியை விளக்கில் காட்டி, மிதமான சூடில் கால் விரல் நகத்தின் ஓரங்களில் தடவவும். அழுக்கு தானாக வெளியே வந்துவிடும்.

04. மருதாணி இலையை விழுதுபோல் நன்கு அரைத்து, வெடிப்பு உள்ள இடங்களில் தினமும் தடவிவந்தால் வெடிப்பு நீங்கும்.

05. காலை மற்றும் இரவில் வெதுவெதுப்பான நீரில் பாதங்களை ஐந்து நிமிடங்கள் நனைக்கவும். அது புத்துணர்வைத் தருவதுடன் பாதங்களில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

06. நல்ல காற்றோட்டமான செருப்புகளை அணிய வேண்டும். பாதத்தில் புண், வெடிப்பு பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

07. இரவில் படுக்கப்போவதற்கு முன்பு சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, பேபி ஷhம்பு போட்டுப் பாதங்களை ஐந்து முதல் பத்து நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பிறகு, பழைய டூத்பிரஷhல் பாதத்தை நன்றாக சுத்தம் செய்து, ஈரம் போகத் துடைத்து நல்லெண்ணெயை லேசாக சூடு செய்து காலில் தடவலாம். பாத வலி குறைந்து, தூக்கம் தழுவும்.- © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!