இதப் படித்தால் இனிமேல் முட்டை ஓட்டை எறியவே மாட்டீர்கள்..!


நாம் அன்றாடம் உண்ணும் முட்டையில் சத்துக்கள் பொதிந்துள்ளதைப் போலவே தான் முட்டை ஓட்டிலும் சத்துக்கள் பொதிந்துள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த முட்டை ஓட்டை பலவழிகளில் பயன்படுத்தலாம்.

இருப்பினும் இக்காலத்தில், முட்டை ஓட்டை வெறும் வீசும் பொருளாகவே எல்லாரும் கருதுகின்றனர். ஆனால் இந்த முட்டை ஓட்டை வைத்து என்னவெல்லாம் செய்யலாம் என்பதை தெரிந்தால் எவரும் முட்டை ஓட்டை வீச மாட்டார்கள் என்று தான் கூறவேண்டும்.

01. முட்டை ஓடுகள் இரத்த அழுத்தத்தினை குறைக்கவும், கொழுப்பின் குறைக்கவும் உதவுகிறது. தினமும் நாம் அரை தேக்கரண்டி முட்டை பவுடரை உட்கொண்டால் நம் அன்றாட தேவைக்கான கால்சியத்தில் 90 சதவீதம் கிடைத்துவிடும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

02. முட்டை ஓட்டினை முகத்தில் தேய்க்கும் போது சருமம் மென்மையடையும்.

03. முட்டை ஓட்டில் உள்ள கல்சியமானது உடலுக்கு மட்டுமல்லாது தோட்டத்தில் உள்ள தாவரங்களுக்கும் நல்ல உரமாக அமையும்.


04. முட்டை ஓட்டினை உடைத்து அதனை வினிகருடன் கலந்து தரையில் படிந்திருக்கும் கரைகளை எளிதாக அகற்றலாம்.

05. முட்டை ஓட்டினை நன்கு அரைத்து நம் வீட்டில் வளர்க்கப்படும் நாய் போன்ற விலங்குகளுக்கு கொடுக்கலாம். இதன் மூலம் அவற்றிற்கு தேவையான கல்சியம் கிடைக்கும்.

06. காபி கலக்கும் போது அதனுடன் சிறிது முட்டை ஓட்டின் பவுடரை சேர்த்தால் அதில் உள்ள கசப்பு தன்மை குறைந்து இனிப்பு சுவை அதிகரிக்கும். – © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!