கண்களில் அரிப்பா? கவலை வேண்டாம் – இதோ சில இயற்கை மருத்துவ முறைகள்..!


கண்களில் அரிப்புத் தன்மை ஏற்படுவதென்பது நம்மை மிகவும் சங்கடத்திற்குள்ளாக்கும் ஒரு விடயமாகும். இந்த அரிப்பானது சில சமயங்களில் தூசு உட் புகுவதால் ஏற்படுகின்றது. ஒரு வேளை தூசு உட் புகுந்ததன் காரணமாக கண்களில் அரிப்பு ஏற்பட்டிருப்பின் அது தொடர்பில் கவலை கொள்ளத் தேவையில்லை.

மாறாக வேறு காரணங்களால் அரிப்பு ஏற்படின் அது தொடர்பில் நாம் அக்கறை கொள்ள வேண்டும். வேறு காரணங்களா எனக் கேட்கின்றீர்களா? ஆம், இந்த அரிப்பானது ஒவ்வாமை, வைரஸ் தொற்று, கண்ணீர் குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பு அல்லது வேறு ஏதேனும் நிலைமைகளாலும் ஏற்படும்.


எது எப்படியிருப்பினும், முதலில் உங்கள் கண்களில் ஏன் அரிப்பு ஏற்படுகின்றது என்பதற்கான சரியான காரணத்தை கண்டறிந்து அதற்கேற்ப மருத்துவம் செய்தல் சிறந்ததது.

இருப்பினும், கண்களில் ஏற்படும் அரிப்பை குறைக்க சில இயற்கை மருத்துவ முறைகளையும் முயற்சித்துப் பார்க்கலாம். அவை என்ன என்பதை இப்போது பார்ப்போம்.

01. ஐஸ்கட்டி தோய்த்த துவாயை வைத்தல்
கண்களில் அரிப்பு ஏற்படம் பட்சத்தில் ஐஸ் கட்டியொன்றை சிறு தவாயில் நன்கு தோய்த்துதெனை கண்ணின் மேல் வைக்க வேண்டும். இது அரிப்பின் வீரியத்தைக் கட்டுப்படுத்தும்.


02. வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயில் உள்ள சத்துக்கள், கண்களில் ஏற்படும் அரிப்பு, வீக்கம் மற்றும் தொற்றுக்களை தீர்க்கவல்லது. வெள்ளரிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனை நன்கு கழுவி சுமார் 15 தொடக்கம் 20 நிமிடங்களுக்கு காய விடவும். பின்னர் அதனை கண்களின் மேல் வைத்து 10 தொடக்கம் 12 நிமிடங்களின் பின்னர் கழுவவும்.


03. குளிர்ந்த பால்
குளிர வைத்த பாலில் பஞ்சை நனைத்து அதனை கண் மேல் வைப்பதன் மூலம் அரிப்பு உடனடியாக குணமாகும்.

04. உப்பு நீர்
கொதித்தாறிய தண்ணீரில் ஒரு தேக்கரண்டி உப்பை சேர்த்துக் கொள்ளவும். அதனை நன்கு கலக்கி இயன்ற வரை கண்கள் மேல் பூசி வர வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அரிப்பு நீங்கும்.


05. க்ரீன்டீ
க்ரீன்டீ பக்கெற்றுக்கள் இரண்டை எடுத்துதெனை சுடுநீரில் இடவும். பின்னர் அந்த நீர் குளிர்ந்தவுடன் அதனை அரிப்பு உள்ள கண்ணின் மேல் பூச வேண்டும். இல்லது கண்களை க்ரீன்டீயில் கழுவுவதம் சிறந்தது. இவ்வாறு செய்வதன் மூலம் அரிப்பு குணமடையும். – © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!