ஐபோன் X டிஸ்ப்ளேவில் ஏற்பட்ட கோளாறு… காரணம் இது தான்…!


ஆப்பிள் பிரியர்கள் மிக ஆவலோடு காத்திருந்து வாங்கிய ஐபோன் X ஸ்மார்ட்போனில் தொடர் பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் சில ஐபோன் X மாடல்களின் டிஸ்ப்ளேவில் பச்சை நிற கோடு காணப்படுவதாக கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் பத்தாவது ஆண்டு விழாவை குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட ஐபோன் X ஸ்மார்ட்போனில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக சில வாடிக்கையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஐபோன X பயனர்களில் சிலருக்கு தங்களது ஐபோன் X டிஸ்ப்ளேவில் பச்சை நிற கோடு காணப்படுவதாக தெரிவித்துள்ளனர். இந்த கோடு ஐபோன் X ஸ்மார்ட்போனின் ஹார்டுவேர் கோளாறு மூலம் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

எனினும் மின்சார அமைப்புகளில் ஏற்பட்ட பிழை தான் இதற்கு காரணம் என சில வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். புதிய பிரச்சனை அதிகபட்சம் 25 ஐபோன் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.


இது தொடர்பாக பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் டுவிட்டர், பேஸ்புக், ரெடிட் உள்ளிட்ட தளங்களில் தங்களது பிரச்சனைகளை தெரிவித்து வருகின்றனர். புதிய ஐபோன் X ஸ்மார்ட்போன்கள் துவக்கத்தில் நன்கு வேலை செய்யும் பட்சத்தில், தொடர்ச்சியான பயன்பாடுகளில் இவ்வாறான கோளாறு ஏற்பட்டிருக்கிறது.

மேலும் சமூக வலைத்தளங்களில் பிதிவிடப்பட்டுள்ள ஐபோன் X ஸ்மார்ட்போன்கள் கீழே விழுந்தோ அல்லது சேதமடைந்திருந்ததாக தெரியவில்லை. துவக்கத்தில் மெல்லிய கோடு காணப்பட்டு அதன்பின் கோடு மிக தெளிவாகியுள்ளதாக ஆப்பிள் வாடிக்கையாளர் தெரிவித்துள்ளார்.

ஸ்மார்ட்போனினை ரீஸ்டார்ட் அல்லது ரீஸ்டோர் என எதை செய்தாலும் பச்சை கோடு டிஸ்ப்ளேவில் இருந்து மறையவில்லை. இந்த பிரச்சனை ஐபோன் X ஸ்மார்ட்போனின் 64 ஜிபி மற்றும் 256 ஜிபி சில்வர் மற்றும் ஸ்பேஸ் கிரே மாடல்களில் ஏற்படுவதாக கூறப்படுகிறது.


அமெரிக்கா, கனடா, போலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இந்த பிரச்சனை ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் ஐபோன் X ஸ்மார்ட்போனின் திரை குளிர்ச்சியான சூழ்நிலைகளில் வேலை செய்யாமல் போவதாக சில வாடிக்கையாளர்கள் தெரிவித்திருந்தனர்.

எனினும் இந்த பிரச்சனையை மென்பொருள் அப்டேட் மூலம் சரி செய்வதாக ஆப்பிள் தெரிவித்தது. இந்நிலையில், புதிய பிரச்சனை ஏற்படுவதாக ஆப்பிள் வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஐபோன் X ஸ்மார்ட்போன்களை ஆப்பிள் நிறுவனம் இலவசமாக சரி செய்து வழங்குகிறது.

கூடுதலாக ஆப்பிள் பொறியாளர்கள் பிரச்சனையை முழுமையாக புரிந்து கொள்ளும் நோக்கில் பிரச்சனை சார்ந்த தகவல்களை முழுமையாக கேட்டறிந்து கொள்கிறது. வழக்கமான ஹார்டுவேர் மற்றும் மென்பொருள் பிழைகளை ஆப்பிள் இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் சரி செய்வது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!