பித்தப்பையில் உள்ள கற்களை இயற்கையான வழியில் எப்படி கரைக்கலாம் என தெரியுமா..?


நாம் உண்ணும் உணவுகளை சமிபாடடைய வைக்கும் முக்கிய செயற்பாட்டிற்கு எமது உடலில் உள்ள பித்தப்பை உதவி புரிகின்றது. நாம் உணவு உட்கொண்டதும், பித்தப்பை சுருங்கி விடும். ஏனெனில் உணவு சமிபாட்டிற்கென பித்தப்பையால் சேமித்து வைக்கப்பட்டிருந்த நீர் இரைப்பைக்கு வெளியேறுவதனாலேயே ஆகும்.

பித்தப்பை சரிவர சுருங்கி விரியாது போனால் அதிலிலுள்ள நீர் வெளியேறாது காலப்போக்கில் கற்களாக மாறி விடும். இதுவே பித்தப்பை கற்கள் என அழைக்கப்படுகின்றது.

பொதுவாக நமது தவறான வாழ்க்கை முறையினால் எல்லா வயதினருக்கும் இந்த பித்தப்பை கற்கள் உருவாகின்றன. எனினும், பெண்களே அதிகளவில் பாதிப்படைகிறார்கள்.
புற்றுநோய்க்கு வழிகோலும் இந்த பித்தப்பை கற்களை, நாமே இயற்கை வழியில் அகற்றலாம். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் எனப் பார்ப்போம்.


01. முதல் ஐந்து நாட்களுக்கு, தொடர்ந்து 4 கோப்பை ஆப்பிள் பானத்தை அருந்தவும் அல்லது தினமும் 4 அல்லது 5 ஆப்பிள்களை உட்கொள்ளவும். ஏனெனில் பித்தப்பையில் உள்ள கற்களை மிருதுவாக்க ஆப்பிள் பானம் உதவி புரிகின்றது.

02. ஆறாம் நாளில், மாலை 6 மணி மற்றும் இரவு 8 மணிக்கு சுடுநீரில் எப்சம் உப்பை (மெக்னீசியம் சல்பேட்) கலந்து குடிக்கவும். எப்சம் உப்பு, பித்தப்பை குழாய் திறப்பை எளிதாக்கும்.

03. இரவு 10 மணிக்கு, அரை கோப்பை ஒலிவ் எண்ணெய் அல்லது எள்ளு எண்ணெயை, அதே சம அளவுள்ள எலுமிச்சை சாற்றுடன் நன்கு கலக்கி குடிக்கவும். இது பித்தப்பை குழாய் வழியே, கற்கள் வெளியேற வழிவகுக்கும்.


04. அன்றைய தினத்தில், இரவு நேர உணவை தவிர்க்க வேண்டும். மறுநாள் காலை, இயற்கை உபாதையில், பச்சை நிற பித்தப்பை கற்கள் வெளியேறி இருப்பதை காணலாம்.

இந்த முறை மூலம், பித்தப்பை கற்களை இலகுவாக அகற்ற முடியும்! – © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!