துளசி விதையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?


துளசி இலை பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்தது. துளசி மூலிகை மிகக் குறைந்த கொழுப்பு சத்துகள், கலோரி வகைகள், பல அத்தியாவசிய ஊட்டச்சத்து, தாதுக்கள் மற்றும் வைட்டமின்களையும் கொண்டுள்ளது.


துளசி விதைகள் ஆன்டிவைரல், ஆன்டிபாக்டீரியல், ஆன்டிஸ்பாஸ்மோடின் மற்றும் ஆன்டிஃபங்கல் ஆகிய குணங்களை கொண்டுள்ளது.

துளசி விதையின் மருத்துவ நன்மைகள்
* துளசி விதை வலிப்பு நோயை குணப்படும் மருந்துகளின் பயன்களை கொண்டுள்ளது.


* இது கக்குவான் இருமல் போன்ற சிகிச்சைக்கு நல்ல தீர்வினை அளிக்கிறது.

* துளசி விதைகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி, நீரிழிவு நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.


* துளசி விதையில் உள்ள நார்ச்சத்துக்கள், செரிமான செயல்பாட்டை சீராக்கி, மலச்சிக்கல், வாய்வுத்தொல்லை போன்ற வயிற்று கோளாறு பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

* அடிக்கடி ஏற்படும் வயிற்றுப்பசியை கட்டுப்படுத்தி, அதிகப்படியான உடல் எடையை குறைக்க துளசி விதை பயன்படுகிறது.


* துளசி விதை சளி, காய்ச்சல், இருமல் போன்ற சுவாசம் தொடர்பான நோய்களை குணப்படுத்த சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

* தோல் நோய்த் தொற்றுக்கள், புண்கள், வெட்டு காயங்கள் போன்ற தோல் பாதிப்புகளுக்கு துளசியை விதை எண்ணெய் நல்ல பலன் அளிக்கும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!