வெங்காய சுவைக்கு அடிமையானவர்கள் பாக்கியசாலிகள்… ஏன் தெரியுமா..?


வெங்காயம் என்றாலேயே, பலர் கண்ணுக்கு எட்டாத தூரத்தில் போய் நிற்பதுண்டு. ஏனெனில் வெங்காயம் என்றதுமே அழுகை தான் ஞாபகத்திற்கு வரும். அதுமட்டுமின்றி, வெங்காயத்தின் சுவையைக் கூட பெரும்பாலானோருக்கு பிடிப்பதில்லை. இருந்த போதும், வெங்காய சுவைக்கு அடிமையானவர்களும் இவ் உலகில் இருக்கத் தான் செய்கிறார்கள்.

ஒரு வகையில் சொல்லப்போனால், வெங்காய சுவைக்கு அடிமையானவர்கள் பாக்கியசாலிகள் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் வெங்காயத்தில் பல்வேறு சத்துக்கள் பொதிந்துள்ளன. இந்த வெங்காயத்தை பச்சையாக தினமும் உண்பதால் பல்வேறு நன்மைகள் கிட்டுகின்றன.

பச்சை வெங்காயத்தை உண்பதால் எமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன?


01. இரைப்பை புற்றுநோய் தடுக்கப்படுகின்றது.
02. இரத்தம் உறைவது தடுக்கப்படும். நன்கு சமைக்கப்பட்ட வெங்காயத்தில் இந்த செயற்பாடு குறைந்தளவே இருக்கும் என்பதை நினைவில் இருத்திக்கொள்ள வேண்டும்.
03. நல்ல தூக்கத்திற்கு வித்திடும்.
04. தோல் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும்.
05. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு ஒவ்வாமை பிரச்சினைக்கும் முற்றுப்புள்ளி வைக்கின்றது.
06. ஆண்டிபயாட்டிக்காக செயற்படுகின்றது. அதிலும் குறிப்பாக வாயில் ஏற்படும் தொற்றுக்கு எதிராக செயற்படும்.
07. கிருமி நாசினியாக செயற்படும் வல்லமை கொண்டது.


குறிப்பு
பச்சை வெங்காயத்தை உட்கொண்டதன் பின்னர் சிலருக்கு வீக்கம், தலைவலி மற்றும் அதிகபடியான வாய்வு வெளியேற்றம் என்பன ஏற்படலாம். அதனால், வெங்காயத்தை சுத்தமாக்கும் போது அதனை உப்பு நீரில் நன்கு கழுவுதல் வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மேற்குறிப்பிட்ட விளைவுகள் தடுக்கப்படும்.- © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!