2 இலைகள் தின்றால் போதும்… ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்..!

சர்க்கரை நோய் இன்று வேகமாக பரவி வருகிறது ஒரு காலத்தில் 45 வயதுக்கு மேல் இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனை பணக்கார நோய் என்று கூறி வந்தார்கள்.

ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. சிறு குழந்தை முதல் சக்கரை நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த மருந்து மாத்திரைகளை சாப்பிடுகின்றனர்.

ஆனாலும் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியவில்லை என ஒரு சிலர் புலம்புவதையும் காணமுடிகிறது. இந்த நிலையில் சர்க்கரை நோய்க்கு மருந்து மாத்திரை தேவை இல்லை.

இன்சுலின் தாவரத்தின் 2 இலைகள் தின்றால் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க முடியும் என ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மென்பொருள் நிபுணர் மொட்டமறி சந்தீப் கூறியுள்ளார்.

இவர் அவரது வீட்டு மாடியில் சிறிய தோட்டம் அமைத்து அதில் இன்சுலின் செடிகளை வளர்த்து வருகிறார். இதன் மூலம் தனது உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இன்சுலின் செடியின் இலைகளை உட்கொண்டதன் மூலம், கடந்த 7 ஆண்டுகளாக நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கிறேன். “நான் மருந்து உட்கொள்வதை நிறுத்திவிட்டு கடந்த 7 வருடங்களாக இன்சுலின் செடியின் இலைகளை உட்கொண்டு வருகிறேன்.

மேலும், இந்த 7 ஆண்டுகளில் நான் எந்த டாக்டரையும் பார்க்கவில்லை. இன்சுலின் தாவரங்களை நான் வழங்கி வருகிறேன். “இலைகளை தவறாமல் எடுத்துக்கொண்ட பிறகு, அவர்களின் ரத்த சர்க்கரை அளவு குறைவதைக் கண்டேன்.

ஒரு நாளைக்கு 2 இலைகளுக்கு மேல் சாப்பிட வேண்டாம். மேலும் காலையில் ஒரு இலையையும் மாலையில் மற்றொரு இலையையும் சாப்பிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!