சிவப்பு நிறத்தில் தோல் தடித்தல், அரிப்பு ஏன் ஏற்படுகின்றது என தெரியுமா?


எமது உடலில் ஏற்படும் அளவுக்கு அதிகமான அரிப்பு என்றால் எல்லோரும் முகம் சுழிப்பார்கள். இந்த அரிப்பு ஏன் ஏற்படுகின்றது என்பது உங்களுக்கு தெரியுமா? அரிப்பு ஏன் ஏற்படுகின்றது என்பதை கண்டறிந்து விட்டால் அதற்கு சுலபமாக வைத்தியம் செய்து விடலாம்.

அரிப்பு என்றால் என்ன? இந்த அரிப்பு ஏன் ஏற்படுகின்றது எனப் பார்ப்போம்!
அரிப்பு என்பது எமது உடல் எமக்கு வழங்கும் ஒருவித அலாரமே ஆகும். உடம்புக்குள் வேண்டாத பொருள் ஒன்று நுழைந்துவிட்டால் எமக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் அறிகுறிதான் இந்த அரிப்பு. இது சில நேரம் இதமாகவும் பல நேரம் எரிச்சலையும், வெறுப்பையும் ஏற்படுத்துவதாகவும் மாறிவிடும். உடலியல் ரீதியில் சொன்னால் அரிப்பு என்பது ஒவ்வாமையின் வெளிபாடாகும். இதை செயல்படுத்துவது நம் தோலில் உள்ள மாஸ்ட் செல்கள்.


எமது உடலால் ஏற்க முடியாத பொருள் ஒன்று உட்புகும் பட்சத்தில், இரத்தத்தில் இயற்கையாகவே புரதம் வெளியிடப்படுகின்றது. இந்த எதிர்ப்பு ஆற்றல் தான் அரிப்பு ஏற்பட முதற் காரணமாய் விளங்குகின்றது. இதை இம்யூனோகுளோபுலின் ஈ என்பார்கள். இந்த புரதத்தை இரத்த செல்கள் உருவாக்குகின்றன. பிடிக்காத பொருள் முதல்முறையாக உடம்புக்குள் நுழையும்போது, இந்த புரதம் உருவாகி இரத்தத்தில் காத்திருக்கும். மீண்டும் அதே ஒவ்வாத பொருள் உடலுக்குள் நுழையும்போது, இந்த புரதம் ஒவ்வாமை பொருளுடன் சேர்ந்து மாஸ்ட் செல்களைத் தூண்டும்.

இதன் காரணமாக ஹிஸ்டமின், லுயூக் கோட்ரின் எனும் வேதிப்பொருட்களை மாஸ்ட் செல்கள் வெளியேற்றும். இவை இரத்தக்குழாய்களை விரிவடையச் செய்து அங்குள்ள நரம்பு முனைகளை தாக்கும். அதன் விளைவால் அரிப்பு, தடிப்பு, தோல் சிவப்பது போன்றவை ஏற்படுகின்றன.


இந்த அரிப்புக்கு காரணம் என்ன என்பதை கண்டறிந்து வைத்தியம் செய்தால் அது சரியாகி விடும். ஒருவருக்கு திடீரென அரிப்பு, தோல் தடித்தல் போன்றன ஏற்படுமாயின் அச்சம் கொள்ள வேண்டாம்!- © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!