இந்தியாவில் சியோமி ரெட்மி நோட் 5, ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்…!


சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.

இதே ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரெட்மி 5 பிளஸ் என்ற பெயரில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 5.99 இன்ச் FHD பிளஸ் 18:9 ரக ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 625 சிப்செட், 4 ஜிபி ரேம் ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் கொண்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, 1.25μm பிக்சல் டூயல்-டோன் எல்இடி ஃபிளாஷ், 5 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் செல்ஃபி ஃபிளாஷ் கொண்டுள்ளது. இத்துடன் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.


சியோமி ரெட்மி நோட் 5 சிறப்பம்சங்கள்:

– 5.99 இன்ச் 2160×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி.+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ்
– 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட்
– அட்ரினோ 506 GPU
– 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
– 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் சார்ந்த MIUI 9
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்இடி ஃபிளாஷ், 1.25μm பிக்சல், f/2.2 அப்ரேச்சர்
– 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0 அப்ரேச்சர்
– கைரேகை மற்றும் இன்ஃப்ராரெட் சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

இந்தியாவில் ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் பிளாக், கோல்டு, ரோஸ் கோல்டு மற்றும் லேக் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜிபி ரேம் கொண்ட மாடலின் விலை ரூ.9,999 என்றும் 4 ஜிபி ரேம் கொண்ட மாடலின் விலை ரூ.11,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனுடன் சியோமி க்ளியர் கேஸ் ஒன்றும் இலவசமாக வழங்கப்படுகிறது. ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனுடன் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனும் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனிலும் 5.99 இன்ச் ஃபுல் ஹெச்.டி.+ 2.5D வளைந்த கிளாஸ் ஸ்கிரீன், ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் வழங்கப்பட்டு இருக்கிறது.

எனினும் நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிபராகன் 636 சிப்செட் மற்றும் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 12 எம்பி + 5 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்இடி ஃபிளாஷ் மற்றும் 20 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

செல்ஃபி கேமராவுடன் ஃபிளாஷ் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் இந்த வசதி மார்ச் மாத இறுதியில் புதிய அப்டேட் மூலம் வெளியிட இருக்கிறது.


சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ சிறப்பம்சங்கள்:

– 5.99 இன்ச் 2160×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி.+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்
– அட்ரினோ 509 GPU
– 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் சார்ந்த MIUI 9
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX486 செனசார், f/2.2 அப்ரேச்சர், டூயல்-டோன் எல்டி பிளாஷ்
– 5 எம்பி பிரைமரி கேமரா, f/2.0 அப்ரேச்சர்
– 20 எம்பி செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், f/2.2 அப்ரேச்சர், எல்இடி பிளாஷ்
– கைரேகை மற்றும் இன்ஃப்ராரெட் சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை. ப்ளூடூத்
– 4000 எம்.ஏ.ஹெச் பேட்டரி

இந்தியாவில் சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் பிளாக், கோல்டு, ரோஸ் கோல்டு மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது.

ரெட்மி நோட் 5 ப்ரோ 4 ஜிபி ரேம் கொண்ட மாடலின் விலை ரூ.13,999 மற்றும் 6 ஜிபி ரேம் கொண்ட மாடலின் விலை ரூ.16,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனும் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. – Source : maalaimalar.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!