கபடி வீராங்கனைக்கு வீட்டில் பெற்றோரால் நிகழ்ந்த துயரம்…!


அரியானாவில் பெண் வீராங்கனையை வீட்டில் அடைத்து வைத்து திருமணத்திற்கு பெற்றோர் கட்டாயப் படுத்தியதாக கூறப்பட்டுள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரியானா மாநிலம் ரோத்தக் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தேசிய அளவிலான கபடி வீராங்கனை ஒருவர், மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரில், தன் பெற்றோர் தன்னை தனி அறையில் பூட்டி வைத்து திருமணத்திற்கு கட்டாயப்படுத்தியதாக குற்றம்சாட்டியுள்ளார்.

“கடந்த ஆண்டு (2017) வயதான நபருக்கு என்னை திருமணம் செய்து வைக்க என் பெற்றோர் முடிவு செய்தனர். நான் எதிர்ப்பு தெரிவித்த போது என்னை கர்னால் பகுதிக்கு அழைத்துச் சென்று தனி அறையில் அடைத்து வைத்து பூட்டி கட்டாய திருமணம் செய்ய வற்புறுத்தினர்.

அவர்களிடம் இருந்து தப்பி ரோத்தக் நகருக்கு வந்துவிட்டேன். பின்னர் என் தந்தை சில நபர்களுடன் வந்து என்னை மீண்டும் கட்டாயமாக அழைத்து சென்றுவிட்டனர். தற்போது மீண்டும் அவர்களிடம் இருந்து தப்பிவிட்டேன்.

ஆனால் என் உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் உள்ளது. நான் தொடர்ந்து படிக்கவும், கபடி விளையாடவும் விரும்புகிறேன்” என மனுவில் கூறியுள்ளார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மாநில முதல்-மந்திரி மனோகர் லால் கத்தாருக்கும், மாநில டி.ஜி.பி.க்கும் கடிதம் எழுதி உள்ளார். – Source : maalaimalar.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!