சர்க்கரை நோய் வராமல் தடுக்கவும், வந்தால் அதை குணப்படுத்தவும் உதவும் உணவு வகைள்!

நீரிழிவு நோய் என்பது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு தேவையை விட அதிகமாக இருப்பது ஆகும். மிகவும் தாகமாக உணர்வது, வழக்கத்தை விட அதிகமாக சிறுநீர் கழித்தல், மிகவும் சோர்வாக உணர்வது, உடல் எடை குறைதல், கால்கள் மரத்துப்போதல், வாய்ப்புண் அடிக்கடி ஏற்படுதல், கண் பார்வை மங்குதல், புண்கள் ஏற்பட்டால் எளிதில் குணமடையாத நிலை, தாம்பத்யத்தில் ஆர்வம் இல்லாத நிலை போன்றவை நீரிழிவு நோயில் காணப்படும் பொதுவான அறிகுறிகள்.

இது நபருக்கு நபர் வேறுபடும். சித்த மருத்துவத்தில் நீரிழிவு, இனிப்பு நீர், மதுமேகம் என்றழைக்கப்படுகிறது, நீரிழிவு நோய் கட்டுப்பாடில்லாமல் இருந்தால் ஏழு உடல் தாதுக்களையும் பாதித்து உடலை உருக்கி விடும்.

ஆங்கில மருத்துவமுறையில் டைப் 1, டைப் 2 என்று நீரிழிவு நோய்கள் இரண்டுவிதமாக அழைக்கப்படுகின்றன. இது தவிர கர்ப்ப காலத்தில் வரும் ஜெஸ்டேசனல் நீரிழிவு, சிறு குழந்தைகளுக்கு வரும் ஜுவைனல் நீரிழிவு நோய்களும் உண்டு.

நீரிழிவு நோய் வராமல் தடுக்கவும், வந்தால் அதை குணப்படுத்தவும் உதவும் உணவு வகைள் பற்றி காண்போம்:

1) நார்ச்சத்து அதிகமுள்ள வாழைப்பூ, வாழைத்தண்டு, அவரை, பீன்ஸ், நூல்கோல், நெல்லிக்காய், வெந்தயம், வெண்டைக்காய், பாகற்காய், கோவைக்காய், புடலங்காய், சுரைக்காய், கீரைகளை சேர்க்க வேண்டும். மாவுச்சத்து, இனிப்பு சேர்ந்த உணவுகளை அளவோடு எடுக்க வேண்டும்.

2) நெல்லிக்காய், கறிவேப்பிலை இரண்டையும் அரைத்து அதன் சாறு 30 மிலி வீதம் தினமும் குடிக்கலாம். இது உடல் சோர்வை நீக்கி புத்துணர்ச்சி தரும்.

3) வெந்தயம், கருஞ்சீரகம் இரண்டையும் சம அளவில் எடுத்து வறுத்து பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும், தினமும் இரவு 1 டீஸ்பூன் வெந்நீரில் சாப்பிட, மலச்சிக்கல் நீங்கும், ரத்த சர்க்கரையின் அளவு, தேவையில்லாத கொழுப்பைக்குறைக்கும்.

இதுதவிர தினமும் சைக்கிள், நடைப்பயிற்சி, நீச்சல், இறகுப்பந்து என ஏதாவது ஒரு உடற்பயிற்சி செய்ய வேண்டும். மன அழுத்தம், மனக்கவலை இல்லாமல் வாழப்பழக வேண்டும்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!