இந்த உணவுகளைச் சாப்பிட்டால் தலைமுடி நரைக்காது என தெரியுமா..?


வயதானால் தான் நரைமுடி வரும் என்பது பழைய கதை. இப்போதெல்லாம் சிறு பிள்ளைகளுக்கே தலைமுடி நரைத்துவிடுகிறது. அதற்கு முதல் காரணம் சரியான ஊட்டச்சத்துள்ள உணவு இல்லாமைதான்.

ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொண்டாலே இளம்வயதில் நரைமுடி பிரச்னை வராமல் தவிர்க்க முடியும்.

சில ஊட்டச்சத்து மிக்க உணவுகளை அன்றாடம் எடுத்துக் கொண்டால் நரைமுடி வராது என்று சில உணவுப்பொருள்களை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அப்படி என்னென்ன உணவுகளைச் சாப்பிட்டால் நரைமுடி வராது என்று பார்ப்போம்.

ஸ்பின்னாக்

ஸ்பின்னாக் தலைமுடியின் நிறத்தைப் பாதுகாக்கிறது. ஸ்பின்னாக் மட்டுமல்லாது கீரை வகைகள் அனைத்திலுமே மிக அதிக அளவில் வைட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்து நிறைந்திருப்பதால், அவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதள் மூலம் இளநரையைத் தவிர்க்கலாம்.


பீன்ஸ்

பீன்ஸில் மிக அதிக அளவில் புரதச்சத்து நிறைந்திருக்கிறது. தலைமுடிக்கு புரதச்சத்து மிக அதிகமாக இருக்க வேண்டும். எனவே அடிக்கடி உணவில் புரதத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.


முட்டை

முட்டையில் தேவையான அளவுக்கு வைட்டமின் பி12 நிறைந்துள்ளது. அது இளநரை வராமல் தடுக்கும். தலைமுடியின் வேர்க்கால்களில் ரத்த ஓட்டம் சீராக இருப்பதால் கருமை முடி வெள்ளையாகாமல் பார்த்துக் கொள்ளும்.


கருவேப்பிலை

கருவேப்பிலையை தினமும் 10 இலைகளாவது அப்படியு பச்சையாகச் சாப்பிட்டு வந்தால் தலைமுடி கருமையாகவும் அடர்த்தியாவும் வளரும்.


சிட்ரஸ் பழங்கள்

திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்திருப்பதால் தலைமுதல் கால் வரை ரத்த ஓட்டத்தை மிக சீராக வைத்துக்கொள்வதால் இளநரை பிரச்னை வர வாய்ப்பே இல்லை.


கேரட்

கேரட்டில் வைட்டமின் ஏ நிறைந்திருப்பதால் அது சருமத்துக்கும் தலைமுடிக்கும் மிக முக்கியமான ஊட்டச்சத்து. கேரட் தலைமுடிக்குத் தேவையான மெலனினை சரியாக வழங்குவதால் தலைமுடியின் நிறம் பாதுகாக்கப்பட்டு, கருகருவென இருக்கும்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!