சிவப்பு தக்காளி பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

எளிதில் கிடைக்கக்கூடிய பழங்களில் ஒன்று தக்காளி. இது அதிக மருத்துவ குணம் நிறைந்தது. தக்காளி பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் ஊட்டச்சத்துகள் மற்றும் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம்… ஊட்டச்சத்து கலவை: தக்காளியில், வைட்டமின் சி, பொட்டாசியம், வைட்டமின் கே 1 மற்றும் வைட்டமின் பி 9 போன்றவை நிறைந்திருக்கின்றன.

இவை உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், இதய நோய்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. மேலும் பைலோகுவினோன் என்றும் அழைக்கப்படும், ‘வைட்டமின் கே 1’ ரத்தம் உறைதல் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு முக்கியமானது.

எலும்பு ஆரோக்கியம்:

எலும்புகள் வலுவாக இருப்பதற்கு தக்காளியை தினமும் உணவில் சேர்க்கலாம். வைட்டமின்-கே மற்றும் கால்சியம் சத்து தக்காளி பழத்தில் வளமான அளவில் இருப்பதால், தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் மூட்டு வலி, எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கும்.

கண் பார்வை:

தக்காளி கண் பார்வை ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது. தக்காளியில் வைட்டமின்-ஏ இருப்பதால் கண் பார்வையை மேம்படுத்தி, மாலைக்கண் நோய் வராமல் தடுக்க உதவுகிறது. குணப்படுத்த முடியாத கோளாறான மாகுலர் டி-ஜெனரேஷன் மூலம் ஏற்படும் ஆபத்துக்களை தினமும் தக்காளி பழத்தை சாப்பிடுவதன் மூலம் தடுக்கலாம்.

பொலிவான கூந்தல்:

தக்காளி கூந்தலை அழகாக வைப்பதற்கு உதவுகிறது. தக்காளியில் வைட்டமின்-ஏ இருப்பதால் கூந்தலை திடமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்கும், இதனால் கூந்தல் அழகாக மாறும்.

புற்றுநோய்:

இயற்கையாகவே தக்காளி புற்றுநோய்க்கு எதிராக போராடும் தன்மை கொண்டது. செல்களை பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வைட்டமின்-ஏ, வைட்டமின்-சி போன்ற ஆன்டி-ஆக்சிடன்டுகளும் தக்காளியில் உள்ளன. இதனால் புரோஸ்டேட் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், வாய் புற்றுநோய், தொண்டை புற்றுநோய், உணவுக் குழாய் புற்றுநோய், வயிற்று புற்றுநோய், குடல் புற்றுநோய் போன்றவற்றில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

உடல் எடை குறைய:

தக்காளியில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளதால், உடல் எடையை குறைக்க உதவுகிறது.

மேலும் தக்காளி பழத்தில் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளது. எனவே எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் தக்காளி பழத்தை சாப்பிடலாம்.

100 கிராம் தக்காளியில்…

நீர்ச்சத்து- 95 சதவிகிதம்

புரதச்சத்து- 0.9 கிராம்

கார்ப்ஸ்- 3.9 கிராம்

சர்க்கரை- 2.6 கிராம்

நார்ச்சத்து- 1.2 கிராம்

கொழுப்பு- 0.2 கிராம்

மொத்த கலோரிகள்-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!