மேஷம், ரிஷபம், மிதுனம், கடக ராசிக்கான சனி பெயர்ச்சி 2023 பரிகாரம்!

சனி பெயர்ச்சி 2023 காரணமாக மேஷம் ரிஷம், மிதுனம், கடக ராசியினர் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும், என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.

சனி பகவான் மகர ராசியிலிருந்து, கும்ப ராசிக்கு ஜனவரி 17ம் தேதி பெயர்ச்சி ஆனார்.


இந்த பெயர்ச்சியின் காரணமாக மேஷம், ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், தனுசு ராசியினர் சனிப் பெயர்ச்சியால் பெரிய பிரச்னைகளை சந்திக்க மாட்டார்கள்.
.

அதே சமயம் கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசியினர் இறை வழிபாடு செய்வதும், பரிகாரம் செய்வதன் மூலம் சுப பலன்களைப் பெற்றிட முடியும்.

மேஷ ராசியில் உள்ள அஸ்வினி, பரணி, கார்த்திகை நட்சத்திர சனி பெயர்ச்சி பரிகாரம்.

அஸ்வினி நட்சத்திரம் சனி பெயர்ச்சி பரிகார தெய்வம்:

அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் தினமும் அரசமரத்தடி விநாயகரைத் தொழுது நாளைத் துவங்குங்கள். ஜாதகப்படி நல்ல தசா புத்தி நடைபெற்றால் ராஜயோகம் காண்பார்கள்.

பரணி நட்சத்திரம் சனி பெயர்ச்சி பரிகார தெய்வம் :
பரணி நட்சத்திரத்தினர் விட்டிற்கு அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று தனி சன்னதியிலிருக்கும் லட்சுமி தாயாருக்கு வெள்ளிக் திழமைகளிப் மல்லிகைப் பூச்சரம் தொடுத்து வழிபட்டால் மேலும் சிறந்த பலன்களைப் பெறலாம்.

கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதம் சனி பெயர்ச்சி பரிகாரம் :
கார்த்திகை நட்சத்திரத்தினர் நற்பலனையும், மன உறுதியையும் உங்கள் நட்சத்திர தினத்தன்று தினத்தன்று முருகனை வழிபட்டு வாருங்கள்.

ரிஷபம் சனி பெயர்ச்சி பரிகாரம்

ரிஷப ராசியில் உள்ள கார்த்திகை 2,3,4 , ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 நட்சத்திரங்களுக்கான சனி பெயர்ச்சி பரிகாரம்

கார்த்திகை நட்சத்திரம் 2,3,4ம் பாதம்
கார்த்திகை நட்சத்திர அதிபதி சூரியன், இது ரிஷப ராசியில் அமைந்துள்ளதால், கார்த்திகை நட்சத்திரத்திற்கு உகந்த முருகப் பெருமானை வழிபாடு செய்வதும், வெள்ளிகிழமைகளில் மகாலட்சுமி வழிபாடு செய்து வருவது நன்மை தரும்.

ரோகிணி நட்சத்திரம் சனி பெயர்ச்சி பரிகார தெய்வம்:
ரோகிணி நட்சத்திரத்தினர் எல்லா தரப்பினரும் முன்னேற்றம் காண திருப்பதி வெங்கடாசலபதி மற்றும் அலர்மேல் தாயார் சேர்ந்துள்ள படத்தை வீட்டில் வைத்து சனிக் கிழமைகளில் துளசி மாலை சாற்றி வழிபட வேண்டும்.

மிருகசீரிஷம் நட்சத்திரம் 1,2 பாதம் பரிகாரம்
மிருகசீரிஷம் நட்சத்திரத்திரத்தினர் அதிபதி செவ்வாய் என்பதால் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகனை வழிபடுவதும், எல்லா வகையிலும் நன்மையை பெற்றிட லட்சுமி நாராயணரை வழிபடுவது நல்லது.


​மிதுனம் சனி பெயர்ச்சி பரிகாரம்

மிதுனம் ராசியில் மிருகசீரிஷம் (பாதம் 3,4), திருவாதிரை, புனர்பூசம் பாதம் 1,2, 3 ஆகிய நட்சத்திரங்கள் அடங்கியது.

மிருகசீரிஷம் நட்சத்திரம் 3,4 பாதம்
மிருகசீரிடம் நட்சத்திரத்தினர் பொதுவாக அனைத்து வகையிலும் நன்மை பெற்றிட லட்சுமி நாராயணரை வழிபட வேண்டும்.

திருவாதிரை நட்சத்திரம் சனி பெயர்ச்சி பரிகார தெய்வம்:
திருவாதிரை நட்சத்திரத்தினர் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபடுவதால் தடைகள் விலகும்.

புனர்பூசம் நட்சத்திரம் 1,2,3 பாதம்
புனர்பூசம் அதிபதி குரு.
புனர்பூசம் சனி பெயர்ச்சி பரிகாரமாக வியாழக் கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை தரிசிப்பதும், நவகிரகங்களில் குரு பகவானை வழிபடுவதும் மேன்மையைக் கொடுக்கும்.

கடகம் சனி பெயர்ச்சி பரிகாரம்

புனர்பூசம் நட்சத்திரம் 4ம் பாதம்
புனர்பூசம் அதிபதி குரு.
புனர்பூசம் நட்சத்திரத்தினர் வியாழக் கிழமைகளில் சிவன் கோவிலில் இருக்கும் தட்சிணாமூர்த்தியை வழிபடுவதும், நவகிரகங்களில் சந்திர பகவானை வழிபடுவதும் மேன்மையைக் கொடுக்கும்.

பூசம் நட்சத்திரம் சனி பெயர்ச்சி பரிகார தெய்வம் :
பூசம் நட்சத்திர அதிபதி சனி.
பூசம் நட்சத்திரத்தினர் சனிக்கிழமை தோறும் நவகிரக வழிபாடு செய்யவும். அதே நாளில் அனுமன் வழிபாடு செய்தால் பிரச்னைகள் விலகும்.

ஆயில்யம் நட்சத்திரம் சனி பெயர்ச்சி பரிகார தெய்வம்:
ஆயில்யம் நட்சத்திர அதிபதி புதன் என்பதால் புதன் கிழமைகளில் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்து வர வாழ்க்கையில் மேன்மை உண்டாகும்.
மேலும் நடப்பு தசா புத்திக்கு உரிய கிரகங்களை வழிபாடு செய்து வரவது நன்மையைத் தரும்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!