இந்த பிரச்சனைகளை உடனடியாக தீர்க்க எலுமிச்சை மட்டும் இருந்தா போதும் என தெரியுமா..?


எலுமிச்சையில் மிக அதிக அளவில் வைட்டமின் சி உள்ளது. இது உடலுக்கு ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல், சரும அழகுக்கும் உதவுகிறது

சருமத்துக்கு எலுமிச்சை பயன்படுத்துவதால் சருமப் பொலிவும் புத்துணர்வும் கிடைக்கும். அதோடு, எலுமிச்சையை தண்ணீரில் கலந்து சிறிது உப்பு சேர்த்து தினமும் குடித்து வந்தால், உடல் எடையை மிக வேகமாகக் குறைக்க முடியும். இதுபோன்று எலுமிச்சையால் இன்னும் என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன?…

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் உடல் எடை மிக வேகமாகக் குறைய ஆரம்பிக்கும்.


எலுமிச்சை வயிற்று உபாதைகளைத் தவிர்க்க உதவும். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் வயிற்று வலியைப் போக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும்.

எலுமிச்சை ஆண்டி- பாக்டீரியல் தன்மை கொண்டது. அதனால் எலுமிச்சை நீரை குடித்து வந்தால் மலேரியா, காலரா, டயேரியா மற்றும் டைபாய்டு போன்ற உயிர்க்கொல்லி நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.

பூஞ்சைத் தொற்றுகள் உண்டாகாமல் தவிர்க்கும் மருத்துவ குணம் கொண்டது எலுமிச்சை. இது ரத்தம் உறைதல், உதிரப்போக்கு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும்.

Sick woman wiping her nose

மூக்கில் ரத்தம் வடிதலை எலுமிச்சை கட்டுப்படுத்தும்.

எலுமிச்சை பற்களைப் பாதுகாக்கும். எலுமிச்சை சாறு அல்லது அதனுடைய தோலில் சிறிது உப்பு சேர்த்து பல் துலக்கினால் பற்கள் முத்துப்போல் பளிச்சென இருக்கும். ஈறுகளில் ரத்தம் கசிவதைத் தவிர்க்க முடியும். இதனால் பற்கள் மற்றும் ஈறுகளில் பூஞ்சைத்தொற்றுகள் உண்டாகாமல் இருக்கும்.

அதேபோல் எலுமிச்சை தலைமுடிக்கும் வலுவைக் கொடுக்கிறது. தளர்வாக முடியை அடர்த்தியாக வளரச் செய்யும். பொடுகு் தொல்லையால் அவதிப்படுபவர்கள், முடி உதிர்தல் அதிகமாக உள்ளவர்கள் எலுமிச்சையை முடியின் வேர்க்கால்களில் நன்கு தேய்த்து, சிறிது நேரம் ஊறவைத்து தலையை அலசலாம். எலுமிச்சையை தலையில் தேய்த்துக் குளித்தால் உடலும் குளிர்ச்சி பெறும். முடி பளபளப்படையும்.

சரும வலி, வெயிலால் உண்டாகும் சரும பாதிப்புகள், கரும்புள்ளிகள், முகத்தில் படரும் கருமை போன்றவற்றை எலுமிச்சையைக் கொண்டு போக்க முடியும். எலுமிச்சையை அப்படியே தேய்த்தால் சிலருக்கு சருமத்தில் எரிச்சல் உண்டாகும். அப்படி இருந்தால், சிறிது தண்ணீர் கலந்து சருமத்தில் தடவலாம். சருமம் பளபளப்பாகவும் நல்ல பொலிவுடனும் இருக்கும்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!