ஒரே வாரத்தில் கல்லீரலை சுத்தமாக்க இதை குடித்தாலே போதும்..!


கோல்டன் மில்க் என அழைக்கப்படும் மஞ்சள் பாலைப் பற்றி நீங்கள் கேள்வியுற்றதுண்டா? இந்த மஞ்சள் பாலுக்கு கல்லீரலை சுத்தமாக்கும் மருத்துவ குணம் உண்டு. ஆயுர்வேத முறையிலும் இந்த மஞ்சள் பாலைப் பற்றி அதிகம் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பாலுக்கு உடம்பில் உள்ள நச்சுத்தன்மையை போக்கும் குணம் உண்டு. இரத்த ஓட்டத்தை சீர்செய்வதோடு உடம்பில் உள்ள வீக்கத்தையும் இந்த பால் குறைக்கின்றது.

இந்த பாலை, தேங்காய்ப் பால், தேங்காய் எண்ணெய், இஞ்சி வேர் மற்றும் மிளகு போன்ற வீட்டில் கிடைக்கக் கூடிய பொருட்களை கொண்டு உருவாக்க முடியும். இதை வெறுமனே குடிக்கலாம் அல்லது உணவுப் பொருட்களுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.

எம் முன்னோர்கள் நோயின்றி நெடுநாள் வாழ்ந்தார்கள் என்றால் அதற்கு இது போன்ற இயற்கை மருத்துவமும் காரணம் எனலாம். இந்த பால் தொடர்பில் அண்மையில் மேற்கொண்ட ஆய்விலிருந்து மேலும் பல விடயங்கள் உறுதிபடுத்தப்பட்டுள்ளன. ஆம், இந்த பாலை தினமும் குடித்து வரும் பட்சத்தில் ஒவ்வாமை, ஞாபகமின்மை (அல்ஸைமர்) மற்றும் மனக்குழப்பம் போன்றவற்றிலிருந்தும் விடுபட முடியும்.


அத்தோடு இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு சீராக்கப்படுதல், மன அழுத்தம் குறைக்கப்படுதல் மற்றும் புற்று நோய்க்கு எதிராக செயற்படுதல் என்பனவும் இவற்றில் உள்ளடங்கும்.
இத்தனை மருத்துவ குணம் கொண்ட பாலை எவ்வாறு தயார் செய்வது எனப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
01. ஒரு தேக்கரண்டி மஞ்சள் பொடி
02. சுத்தப்படுத்தி சிறு சிறு துண்டுகளாக நறுக்கப்பட்ட இஞ்சி வேர்
03. ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்
04. மிளகுப் பொடி
05. இரண்டு கோப்பை தேங்காய் எண்ணெய்
06. ஒரு தேக்கரண்டி தேன்
07. அரைத் தேக்கரண்டி லவங்கப் பொடி

செய்முறை
இந்த பாலை தயாரிப்பது மிக மிக இலகு. மேற்குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் ஒரு தட்டில் இட்டு அதனை 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும். 5 நிமிடங்களின் பின்னர் இறக்கி வைத்து அதனை மிதமான சூடாக இருக்கும் போது பருகவும்.
– © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!