அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் இஞ்சி புலாவை இப்படி செய்து சாப்பிடுங்க..!


அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் இஞ்சி புலாவ் சமைத்துச் சாப்பிட்டால் உணவு நன்றாக செரிமானம் ஆகும்.

தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி – 1 கப்
வெங்காயம் – 1
நெய் – 1 ஸ்பூன்
ஆரஞ்சு கலர் – சில துளிகள்
முந்திரி – 5
டூட்டி ப்ரூட்டி பழம் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
இஞ்சி சிரப் தயாரிக்க:
இஞ்சி – 50 கிராம்
சர்க்கரை – கால் கப்
பட்டை – 1 துண்டு
கிராம்பு – 4
ஏலக்காய் – 1
எலுமிச்சம் பழம் – அரை மூடி
தண்ணீர் – 3 கப்


செய்முறை:

இஞ்சியை தோல் சீவி விட்டு நன்றாகத் தட்டிக் கொள்ளவும். தட்டிய இஞ்சியுடன் மற்ற சாமான்களையும் சேர்த்து சர்க்கரை சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். அது நன்றாக கொதித்து 2 கப் மற்றும் கால் கப் அளவு வந்தவுடன் இறக்கி எலுமிச்சம்பழச் சாறு பிழிந்து ஆற விடவும்.
இதை அடுப்பில் வைத்து செய்யவும்.

செய்முறை:
அரிசியை 10 நிமிடம் ஊற வைக்கவும். நெய்யில் வெங்காயத்தைக் கலந்து மைக்ரோ – ஹையில் 3 நிமிடம் வைக்கவும்.

அதனுடன் ஊறிய அரிசி, இஞ்சி சிரப், கலர் சேர்த்து நன்றாக கலந்து 10 நிமிடங்கள் மைக்ரோ – ஹையில் மூடி வைக்கவும். 5 நிமிடம் மீடியம் ஹையில் மூடாமல் வைக்கவும்.

அதனுடன் டூட்டி ப்ருட்டி கலந்து மைக்ரோ – ஹையில் மூடாமல் 2 நிமிடம் வைக்கவும்.

மைக்ரோ தட்டில் நெய்யுடன் முந்திரியைக் கலந்து மைக்ரோ – ஹையில் 3 நிமிடம் வைத்து சாதத்துடன் சேர்க்கவும்.

பிறகு, 3 நிமிடம் கழித்துப் பரிமாறவும்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!