வாட்ஸ்அப் செயலியில் விரைவில் புது அப்டேட்! என்ன தெரியுமா..?


வாட்ஸ்அப் செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் பண பமாற்றம் செய்யு்ம வசதி, இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட வாட்ஸ்அப் பீட்டா பயனர்களுக்கு புதிய அம்சம் வழங்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் சோதனை செய்யப்படும் பண பரிமாற்றம் செய்யும் வசதி மத்திய அரசின் யு.பி.ஐ. (UPI) வழிமுறை சார்ந்து இயங்குகிறது.

வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். பீட்டா 2.18.21 மற்றும் ஆண்ட்ராய்டு பீட்டா 2.18.41 பதிப்புகளில் பண பரிமாற்றம் செய்யும் வசதி சோதனை செய்யப்படுகிறது. இந்தியாவில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகம் என்பதால், டிஜிட்டல் பண பரிமாற்ற எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ்அப் பண பரிமாற்றம் செய்யும் வசதி கிஸ்மோடைம்ஸ் மூலம் வெளியாகி உள்ள நிலையில், இந்த அம்சம் தேர்வு செய்யப்பட்ட பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அம்சத்தை குறுந்தகவல் டைப் செய்யும் பகுதியில் உள்ள அட்டாச்மெண்ட் பகுதியில் இருந்து இயக்க முடியும். அட்டாச்மெண்ட் பகுதியில் கேலரி, வீடியோ, டாக்குமெண்ட் உள்ளிட்டவற்றுடன் காணப்படுகிறது.


பேமெண்ட்ஸ் ஆப்ஷனை கிளிக் செய்ததும், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வங்கியை தேர்வு செய்து, கணக்கை யு.பி.ஐ.-இல் இணைக்க வேண்டும். யு.பி.ஐ. பேமெண்ட் வழிமுறையை இதுவரை பயன்படுத்தாதோர், ஆத்தென்டிகேஷன் பின் உருவாக்க வேண்டும். கூடுதலாக யு.பி.ஐ. கணக்கையும் உருவாக்க (முன்னதாக யு.பி.ஐ. கணக்கை துவங்காதோர்) வேண்டும். இதனை யு.பி.ஐ. செயலி அல்லது குறிப்பிட்ட வங்கி வலைத்தளம் அல்லது செயலி மூலம் மேற்கொள்ள முடியும்.

இதுகுறித்து ஃபோன்அரினா வெளியிட்டுள்ள தகவல்களின் படி வாட்ஸ்அப் பேமெண்ட் அம்சம் பணத்தை அனுப்புவோர் மற்றும் பெறுவோர் செயல்படுத்தி இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பீட்டாவில் சோதனை செய்யப்படுகிறது என்றாலும் வங்கி கணக்குகளை இணைப்பதில் கோளாறு ஏற்படுவதாக வாடிக்கையாளர்கள் குற்றஞ்சாட்டி வருவதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் யு.பி.ஐ. சார்ந்த பண பரிமாற்ற சேவையை செயல்படுத்த வாட்ஸ்அப் முயற்சித்து வருகிறது. முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாத வாக்கில் இதே அம்சம் ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில் காணப்பட்டது. மத்திய அரசு யு.பி.ஐ. வழிமுறையை செயல்படுத்தியது முதல் சாம்சங், சொமாட்டோ, கூகுள் போன்ற நிறுவனங்களும் தற்சமயம் வாட்ஸ்அப் உள்பட தங்களது வன்பொருள் மற்றும் மென்பொருள் சாதனங்களில் யு.பி.ஐ. இணைக்கும் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றன.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!