கண்தானம் கட்டாயம் ஏன் செய்ய வேண்டும்..?

ஒருவர் இறந்தவுடன் 6 மணி நேரத்துக்குள் கண்களை எடுத்துப் பாதுகாக்க வேண்டும். கண்தானம் செய்ய உங்கள் ஊருக்கு அருகில் உள்ள கண்தான வங்கியை அணுக வேண்டும். உங்கள் ஊருக்கு அருகில் உள்ள கண்தான வங்கியின் தொலைபேசி எண், முகவரி ஆகியவற்றை அறிய தமிழக அரசின் 104 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம்.

கண்தான வங்கியிலிருந்து மருத்துவர்கள் வரும்வரை இறந்தவர்களின் கண் இமைகளை மூடி வைக்க வேண்டும். மூடிய இமைகளின் மீது ஈரப்பஞ்சை வைத்திருக்க வேண்டும். இறந்தவர் உடல் உள்ள அறையில் மின்விசிறியை அணைத்துவிட வேண்டும். கண்தானம் கொடுக்க வயது வரம்பு கிடையாது.

நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள்கூட கண்தானம் செய்யலாம். கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும் கண்தானம் செய்யலாம். புற்றுநோய், எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, நச்சு கிருமித்தொற்று, கிருமி பாதிப்பினால் இறந்தவர்கள் மற்றும் காரணம் தெரியாமல் இறந்தவர்களின் கண்களை தானமாக பெற முடியாது.

இறந்த ஒருவரிடம் இருந்து எடுக்கப்படும் ஒரு ஜோடி கண்களைக்கொண்டு, பார்வையிழந்த 2 பேருக்கு பார்வை கொடுக்க முடியும். இந்தியாவில் கருவிழி பாதிப்பினால் பார்வையிழந்து வருபவர்களில் பெரும்பாலானோர் இளம் வயதினரே. அவர்கள் வாழ்நாள் முழுவதும் பார்வையற்றவர்களாக வாழ்வது வேதனையானது. நாட்டில் விபத்து, கிருமி பாதிப்பு, பிறவி குறைபாடு போன்ற காரணங்களால் பார்வையிழந்து சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் வாழ்ந்து வருகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் 30 ஆயிரம் பேர் கருவிழி பாதிப்பினால் பார்வையிழந்து வருகிறார்கள். தற்போது இந்தியாவில் கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவையான கண்களில் சுமார் 50 சதவீத கண்களை மட்டுமே தானமாக பெற முடிகிறது. மீதமுள்ள 50 சதவீத மக்கள், பார்வையிழந்தவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களுக்கு பார்வை கொடுக்க நம்மால் நிச்சயம் முடியும். எப்படி? உங்கள் ஊரிலோ, உங்கள் உறவினர் வீட்டிலோ, உங்கள் குடும்பத்திலோ யாராவது இறக்க நேரிட்டால், கண்தானம் செய்வதன் அவசியம் குறித்து அவர்களுக்கு எடுத்துக்கூறி கண்களைத் தானமாக கொடுத்து உதவ வேண்டும். மண்ணில் புதைத்தவரை மீண்டும் இந்த உலகத்தை பார்க்க வைக்க, கண் தானத்தை தவிர வேறு சிறந்த வழி ஏது?

ஒவ்வொரு ஆண்டும் 30 ஆயிரம் பேர் கருவிழி பாதிப்பினால் பார்வையிழந்து வருகிறார்கள். தற்போது இந்தியாவில் கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவையான கண்களில் சுமார் 50 சதவீத கண்களை மட்டுமே தானமாக பெற முடிகிறது.

மீதமுள்ள 50 சதவீத மக்கள், பார்வையிழந்தவர்களாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு பார்வை கொடுக்க நம்மால் நிச்சயம் முடியும். எப்படி? உங்கள் ஊரிலோ, உங்கள் உறவினர் வீட்டிலோ, உங்கள் குடும்பத்திலோ யாராவது இறக்க நேரிட்டால், கண்தானம் செய்வதன் அவசியம் குறித்து அவர்களுக்கு எடுத்துக்கூறி கண்களைத் தானமாக கொடுத்து உதவ வேண்டும். மண்ணில் புதைத்தவரை மீண்டும் இந்த உலகத்தை பார்க்க வைக்க, கண் தானத்தை தவிர வேறு சிறந்த வழி ஏது?-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!