இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரரின் மனிதநேயம்..!

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக் கடி நிலவுகிறது. இதனால் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.400-க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் வாங்குவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள்.

அவர்களுக்கு இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோசன் மகனாமா மனித நேயத்துடன் உதவிகளை செய்கிறார். அவர் தேநீர் மற்றும் பன் கொடுத்து பரிமாறி உபசரித்துள்ளார். இதனை மகனாமா தனது டுவிட்டர் பக்கத்தில் படத்துடன் பகிர்ந்துள்ளார்.

பெட்ரோலுக்காக வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு கம்யூனிட்டி மீல் ஷேர் குழுவினருடன் இணைந்து தே நீர் மற்றும் பன்கள் வழங்கினோம். நாளுக்கு நாள் வரிசையின் நீளம் நீண்டு கொண்டே போகிறது. மணி கணக்கில் வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படலாம். அதனால் வரிசையில் நிற்பவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளுங்கள்.

உணவு மற்றும் நீர் ஆகாரத்தை கையுடன் எடுத்து செல்லுங்கள். உங்களுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டால் பக்கத்தில் இருப்பவர்களிடமோ அல்லது 1900 உதவி எண்ணுக்கோ போன் செய்யுங்கள். இந்த கடின சூழலில் நம்மை நாம் தான் கவனித்தக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். மகனாபானா 1986-முதல் 1999 வரையிலான காலக்கட்டத்தில் இலங்கை அணிக்காக விளையாடினார். 213 ஒரு நாள் போட்டியிலும் 52 டெஸ்டில் விளையாடி உள்ளார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!