நகம் கடிக்கும் பழக்கத்தை நிறுத்த முடியலையா..? இத ட்ரை பண்ணுங்க..!


நகம் கடித்தல் மனிதர்களின் அசாதாரண பழக்கவழக்கங்களில் ஒன்று. இது ஒரு வகை நோயாகவே கருதப்படுகிறது.

மனஅழுத்தம், மனமுரண், குழப்பம், தாழ்வு மனப்பான்மை, stress, ஒத்துப் போக முடியாமை, இக்கட்டான மனநிலை போன்றதான பலவித உள்ளியல் காரணிகளால் இப்பழக்கம் ஏற்படுவதாகவே ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை வயது பேதமின்றி பலரும் நகம் கடிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளார்கள். நகம் கடிக்கும் பழக்கும் பெரும்பாலும் குழந்தைப் பருவத்தில் தொடங்கி விடுகிறது. பருவவயதில் அனேகமானவர்கள் இப்பழக்கத்திலிருந்து விடுபட்டு விடுகிறார்கள்.

குறிப்பிட்ட சிலரால் இப்பழக்கத்திலிருந்து விடுபட முடிவதில்லை. அனேகமானோர் தம்மை மறந்த நிலையிலேயே நகங்களைக் கடிக்கிறார்கள். பலர் தமது இந்தச் செயற்பாட்டினால் திருப்தியின்மையை அடைந்தாலும், இந்தப் பழக்கத்திலிருந்து மீள முடியாதவர்களாகவே இருக்கிறார்கள்.

தங்களை மற்றவர்கள் மதிக்காமல் ஒதுக்குகிறார்கள் என்ற பயம், தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் தங்கள் நகங்களைக் கடிக்கிறார்கள், தங்களது கோபங்களை மற்றவர்கள் மீது காட்டமுடியாத இயலாமை நிலையைக் கொண்டவர்கள் தங்கள் நகங்களைக் கடிக்கிறார்கள்.

நகம் கடிப்பதிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள்.

1.கைகளுக்கு வேறு வேலைகள் கொடுத்தல்.

2.மருந்துக்கடையில் கிடைக்கக் கூடிய கசப்புத் தன்மையுள்ள மருந்து, எண்ணெய், சாயம் போன்றவற்றில் ஏதாவதொன்றை விரல்களில் பூசி விடுதல் அல்லது விரல்களை அவற்றுள் தோய்த்தெடுத்தல்.


3.விரல்களை துணிகளால் சுற்றிக் கட்டி விடுதல் அல்லது கையுறை போட்டு விடுதல்.

4.குறிப்பிட்ட கொஞ்ச நேரத்துக்கு நகங்களைக் கடிக்காமல் இருந்தால் குழந்தைக்கு மகிழ்ச்சி தரக் கூடிய ஒரு பொருளைத் தருவதாக வாக்குறுதி கொடுத்தல்.

5.நகங்களைப் பராமரித்தல் (நகங்களை ஒட்ட வெட்டி, நகங்களுக்குரிய அரத்தால் தேய்த்து, நகங்களை உரமாக்கக் கூடிய சாயம் பூசி, அதன் பின் எண்ணெய் பூசி, மசாஜ் செய்து விடலாம்.)

6.அழுத்தத்தைத் தீர்த்து வைத்தல் (கண்டிப்பதோ, பேசுவதோ நகங்களைக் கடிப்பதிலிருந்து மீளுவதற்கு இதுவரை உதவியதில்லை. அதற்காகப் பெற்றோர் நகம் கடிப்பதைப் பற்றி அக்கறை கொள்ளாது இருந்து விடலாகாது.

குழந்தைகள் தம்மை மறந்த நிலையிலேயே நகங்களைக் கடிக்கிறார்கள். அந்த நேரங்களில் பெற்றோர் அதை மெதுவாகச் சுட்டிக் காட்ட வேண்டும். பொது இடங்களில் நகங்களைக் கடித்தல் கூடாது என்பதை ஏதாவதொரு புனை சொல்லால் குழந்தைக்கு ஞாபகப் படுத்த வேண்டும்.

நகம் கடித்தல் மனஅழுத்தத்தின் வெளிப்பாடு. ஆதலால் பெற்றோர் குழந்தை ஏதாவது வகையில் மனம் வருந்திக் கொண்டிருக்கிறதோ என்பதையும், வீட்டிலிருந்தோ, பாடசாலையிலிருந்தோ குழந்தைக்குக் கிடைக்கிறது என்பதையும் கண்டறிந்து அதிலிருந்து குழந்தை மீளுவதற்கான வழிகளைச் செய்ய வேண்டும்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!