வயதான தோற்றத்தை தடுக்க புருவங்களை எப்படிப் பராமரிக்க வேண்டும்..?


சருமங்களில் முடி அதிகமாக இருக்கும் இடங்கள் பொதுவாகவே அதனுடைய மென்மைத்தன்மையை இழந்துவிடும். சருமப் பொலிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம் கவனிக்க வேண்டிய சின்ன சின்ன விஷயங்களை மட்டும் மறந்துவிடுகிறோம்.

சருமத்தைப் பராமரிக்கும்போது, அப்படி ஆண்களால் கண்டுகொள்ளாமலே விடப்படுவது அவர்களுடைய புருவம்.

திடீரென ஒரு நாள் புருவங்களில் முடி அடர்த்தியாக வளர்ந்து, வயதான தோற்றத்தைத் தரும்போது தான், அதை கவனிக்கவே செய்வார்கள். ஆனால் அந்த புருவங்களை எப்படிப் பராமரிக்க வேண்டும் என்பது பற்றி அழகுக்கலை நிபுணர்கள் சில குறிப்புகளைத் தருகிறார்கள்.

புருவங்கள் அதன் வளைந்த தோற்றத்துடன் இருந்தால் தான் அழகாக இருக்ககும். கண்டுகொள்ளாமலே விட்டுவிட்டால் புதர் போல் முடிகள் வளர்ந்து, புருவத்தின் தோற்றத்தையே கெடுத்துவிடும். அதனால், ஹேர்கட் செய்யும் போது சலூனில் சொல்லி, புருவங்களைத் திருத்தச் சொல்லுங்கள். குறைந்தது 2 முதல் 3 வாரங்களுக்கு ஒரு முறையாவது புருவங்களைத் திருத்துங்கள்.


ஒவ்வொரு முறை ட்ரிம் செய்யும் போது மட்டுமே கவனிக்காமல், அடிக்கடி, பிரஷ் அல்லது சிறிய அளவிலான சீப்பைக் கொண்டு சரி செய்யுங்கள். அப்போது, தேவையில்லாமல் வளர்ந்திருக்கும் முடி தனியே தெரியும். சிறிய அளவிலான கத்திரியைக் கொண்டு அதை வெட்டி எடுங்கள். இப்படி அடிக்கடி செய்வதால், புருவங்கள் சுத்தமாகவும் வடிவாகவும் இருக்கும்.

புருவங்களின் மேலும் கீழுமாக, தேவையில்லாமல் முடி வளரும். அவைதான் உங்கள் முகத்தின் அழகையே கெடுத்துவிடுகின்றன. அதனால், சலூக்குப் போய் பிளக் செய்ய முடியாதவர்கள் வீட்டிலேயே செய்து கொள்ளலாம்.

முதலில் முகத்துக்கு ஆவி பிடியுங்கள். அவ்வாறு செய்வதால் சருமத்துளைகள் திறந்து கொள்ளும். அதன்பிறகு, கண்ணாடி முன் நின்று, ஐ புரோ ட்வீசர் கொண்டு தேவையில்லாத முடிகளை மேல்நோக்கி மெதுவாக இழுத்தாலே போதும்.

இப்படி சில சிரமங்களைப் பார்க்காமல் புருவங்களைப் பராமரியுங்கள். அது உங்கள் சருமத்தை மேலும் பளிச்சென, பொலிவாகக் காட்டும்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!