அசத்தும் அம்சங்களுடன் ஏ2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்…!


இன்ஃபோகஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் கிடைக்கும் புதிய ஸ்மார்ட்போனில் அசத்தும் கேமரா அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இன்ஃபோகஸ் நிறுவனத்தின் ஏ2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் புதிய ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் ஹெச்.டி. வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர், ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் வழங்கப்பட்டிருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 5 எம்பி பிரைமரி மற்றும் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பிரைமரி கேமராவுடன் எல்.இ.டி. பிளாஷ் மற்றும் செல்ஃபி கேமராவுடன் ஃபேஸ் பியூட்டி, கேமரா ஃபில்ட்டர் மற்றும் ப்ரோ மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.


இன்ஃபோகஸ் ஏ2 சிறப்பம்சங்கள்:

– 5.0 இன்ச் 1280×720 பிக்சல் ஹெச்டி IPS 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 1.3 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்ப்ரெட்ரம் SC9832 பிராசஸர்
– மாலி-400 GPU
– 2 ஜிபி ரேம்
– 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
– டூயல் சிம் ஸ்லாட்
– 5 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
– 5 எம்பி செல்ஃபி கேமரா
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 2400 எம்.ஏ.ஹெச். பேட்டரி

இன்ஃபோகஸ் ஏ2 ஸ்மார்ட்போன் ஷேம்பெயின் கோல்டு மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. ஆஃப்லைன் முறையில் விற்பனை செய்யப்படும் இன்ஃபோகஸ் ஏ2 விலை ரூ.5,199 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மொபிகுவிக் ரூ.300 கேஷ்பேக் மற்றும் 30 ஜிபி 4ஜி டேட்டா கூடுதலாக வழங்கப்படுகிறது. – Source: maalaimalar.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!