நகச்சுத்தியால் வலியா..? இதோ எளிய கை வைத்திய முறைகள்..!


கையில் அடிபட்டு நகம் பெயர்ந்து புண்ணாகிப் போனாலோ அல்லது நகச்சுத்தி காரணமாகவோ வலியிருந்தால் இந்த எளிய கை வைத்தியத்தைச் செய்து குணம் காணலாம்.

1. படிகாரத்தைப் பொடியாக்கி, நீர் விட்டுக் கெட்டியாகக் குழைந்து சொத்தை நகத்தின் மீது வைத்துக்கட்டிக் கொண்டால், விரைவில் குணம் கிடைக்கும்.

2. நகச் சுத்தியால் அவதிப்படுபவர்கள், வாதநாராயணன் இலையை நன்றாக அரைத்து வெண்ணெய் கலந்து நகச்சுத்தி மீது வைத்து துணியால் கட்டிக்கொண்டால், மூன்றே நாளில் குணம் பெறலாம்.


3. வெங்காயச் சாற்றில் உப்பு கலந்து சூடான சாதத்தில் ஊற்றிப் பிசைந்து, நகச் சுத்தி மீது வைத்துக் கட்டுப்போட்டால் இரண்டு நகச் சுத்தி உடைந்து நிவாரணம் பெறலாம்.

4. பாலைக் காய்ச்சி இறக்கினால், சிறிது நேரத்தில் பாலின் மேல் பகுதியில் ஆடை படியும். அந்த ஆடையை எடுத்து சிறிது சுண்ணாம்பு சேர்த்துக் குழைத்து நகச் சுத்தி மீது தடவினால் குணம் கிடைக்கும்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!