மைக்ரோசாஃப்ட் ஸ்டோரிலிருந்து தீயாய் பரவும் ஆபத்து – பாதுகாப்பது எப்படி?

மைக்ரோசாஃப்ட் ஸ்டோரில் இருந்து புரோகிராம்கள், கேம்களை பதவிறக்கம் செய்வதன் மூலம் இந்த மால்வேர் பரவுகிறது.


சமூக வலைதளங்களில் பயனர்களின் தகவல்களை திருடும் புதிய மால்வேர் ஒன்று மைக்ரோசாஃப்ட் ஸ்டோர் தளத்தில் இருந்து பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

எலக்ட்ரான் பாட் என்று அழைக்கப்படும் இந்த மால்வேர் பயனர்களின் ஃபேஸ்புக், கூகுள், சவுண்ட்கிளவுட் மற்றும் யூடியூப் கணக்குகளில் இருந்து அவர்களுடைய தரவுகளை திருடுவதோடு மட்டும் இல்லாமல், அந்த கணக்குகளின் கட்டுப்பாடுகளையும் எடுத்துகொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாதுகாப்பு ஆய்வு நிறுவனமான செக்பாயிண்ட் ரிசர்ச் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மைக்ரோசாஃப்டின் அதிகாரப்பூர்வ ஸ்டோர் தளத்தில் இருந்து பரவி வரும் இந்த மால்வேர் 5000-க்கும் மேற்பட்ட கணினிகளை தாக்கியுள்ளது. இந்த மால்வேர், பயனர்களின் சமூக வலைதள கணக்குகளை கட்டுப்பாட்டில் எடுத்து, அந்த கணக்குகள் மூலம் பிறர் பக்கங்களை லைக் செய்தல், கமெண்ட் செய்தல் உள்ளிட்ட செயல்பாடுகளை செய்கிறது.

இந்த மால்வேர் மைக்ரோசாஃப்ட் ஸ்டோரில் இருந்து புரோகிராம்கள், கேம்ஸ்களை தரவிறக்கம் செய்வது மூலம் பரவுகிறது. இதனால் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் பயன்படுத்தும் பயனர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளது.

உங்கள் கணினியை ஏற்கனவே இந்த மால்வேர் பாதித்திருந்தால் இவ்வாறு செய்ய வேண்டும்:-

மைக்ரோசாஃப்ட் ஸ்டோரில் இருந்து தரவிறக்கம் செய்த மென்பொருளை அன் இன்ஸ்டால் செய்யவும்.

பிறகு உங்கள் கணினியில் C:\Users\AppData\Local\Packages> சென்று அங்குள்ள மேல்வேர் பேக்கேஜ் ஃபோல்டரை டெலிட் செய்யவும்.

அதன்பின் கணினியில் C:\Users\AppData\Microsoft\Windows\Start Menu\Programs\Startup சென்று, Skype.lnk அல்லது WindowsSecurityUpdate.lnkin என்ற ஃபைலை கண்டுபிடித்து டெலிட் செய்யவும்.

இதன்மூலம் உங்கள் கணினியை மால்வேர் பாதிப்பில் இருந்து பாதுகாக்கலாம்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!