புதிய ஹானர் அப்டேட்டில் அசத்தும் அன்லாக் அம்சம்…!


ஹூவாய் ஹானர் பிரான்டு பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனான ஹானர் 7X சமீபத்திய மென்பொருள் அப்டேட்டில் ஃபேஸ் அன்லாக் அம்சம் வழங்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ள.

ஹூவாய் ஹானர் பிரான்டு சமீபத்திய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனான ஹானர் 7X மென்பொருள் அப்டேட் மூலம் ஃபேஸ் அன்லாக் அம்சம் வழங்கப்பட்டு வருகிறது.

சில வாரங்களுக்கு முன் ஃபேஸ் அன்லாக் வசதியை வழங்குவதாக ஹானர் தெரிவித்ததை தொடர்ந்து இந்த அம்சம் புதிய அப்டேட் மூலம் வழங்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய மென்பொருள் அப்டேட் மூலம் செல்ஃபி கேமராவில் ஏ.ஆர். சென்ஸ் சேர்க்கப்பட்டிருக்கிறது. இத்துடன் வெதர் அப்ளிகேஷன் ஆப்டிமைஸ் செய்யப்பட்டு, கூகுளின் ஜனவரி மாத ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி பேட்ச் வழங்கப்பட்டிருக்கிறது.


எனினும் புதிய அப்டேட்கள் முதற்கட்டமாக சீனாவில் விற்பனை செய்யப்பட்ட சாதனங்களில் மட்டும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

ஹானர் 7X புதிய அப்டேட் B192 பில்டு நம்பருடன் வெளியிடப்படுவதாகவும், முதற்கட்டமாக இந்த அப்டேட் ஹானர் 7X சீனாவில் விற்பனை செய்யப்பட்ட AL10 மாடல் நம்பர் கொண்ட மாடல்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதாக ஆண்ட்ராய்டுசோல் வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தைகளில் ஹானர் 7X ஸ்மார்ட்போன் L21, L22, மற்றும் L24 உள்ளிட்ட பெயர்களில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய அப்டேட் மென்பொருள் அம்சங்களில் அதிகப்படியான மாற்றங்களை கொண்டிருக்கவில்லை என்றும், சமீபத்திய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் பிரபலமான ஃபேஸ் அன்லாக் மற்றும் ஏ.ஆர். லென்ஸ் உள்ளிட்ட பயனுள்ள அம்சங்களை சேர்த்திருக்கிறது.

பயோமெட்ரிக் ஆத்தென்டிகேஷன் வசதியுடன் கூடிய ஹானர் வியூ10 ஸ்மார்ட்போனினை ஹானர் முதலில் அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து ஹானர் 7X ஸ்மார்ட்போனில் ஃபேஸ் அன்லாக் அம்சம் வழங்கப்பட்டிருக்கிறது.


இந்த அம்சம் செல்ஃபி கேமரா உதவியுடன் போனினை அன்லாக் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஹானர் 7X ஸ்மார்ட்போனின் பின்புறம் கேரைகை சென்சார் ஒன்றும் வழங்கப்பட்டிருக்கிறது. புதிய ஃபேஸ் அன்லாக் அம்சத்தை இயக்க செட்டிங்ஸ் — செக்யூரிட்டி மற்றும் பிரைவசி — ஃபேஸ் அன்லாக் ஆப்ஷனை செயல்படுத்த வேண்டும்.

புதிய அப்டேட்டில் சேர்க்கப்பட்டிருக்கும் ஏ.அர். லென்ஸ் கொண்டு செல்ஃபி கேமராக்களில் புதிய எஃபெக்ட்களை சேர்த்து, பின்னணியை மாற்றி கொள்ள முடியும்.

ஹானர் 7X சிறப்பம்சங்கள்:

– 5.93 இன்ச் 2160×1080 பிக்சல் ஃபுல் எச்டி + 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் கிரின் 659 பிராசஸர்
– 4 ஜிபி ரேம்
– 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் மற்றும் EMUI 5.1
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 16 எம்பி கேமரா, எல்இடி பிளாஷ் + 2 எம்பி பிரைமரி கேமரா
– 8 எம்பி செல்ஃபி கேமரா
– கைரேகை ஸ்கேனர்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3340 எம்ஏஎச் பேட்டரி

இந்தியாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹானர் 7X ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. கருப்பு, நீலம் மற்றும் தங்க நிறங்களில் கிடைக்கும் ஹானர் 7X 32 ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ.12,999 மற்றும் 64 ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ.15,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. – Source: maalaimalar.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!