கரு கரு வென அடர்த்தியாக தலைமுடியை வளரச் செய்யும் வாழைப்பழம்… இப்படி யூஸ் பண்ணுங்க..!


தலைமுடி உதிர்தல் பிரச்னை எப்போதும் ஓயாத பிரச்னையாக மாறிவிட்டது. அதற்குக் காரணம் டென்ஷன், தூசி, மாசுக்கள், ஆரோக்கியமில்லாத உணவுகள், கெமிக்கல் கலந்த ஷாம்பு போன்றவற்றைப் பயன்படுத்துவது தான்.

தலைமுடிக்கு ஈரப்பதம் மிக அவசியம். அதனால் தான் நம்முடைய முன்னோர்கள் தலை குளிரும் அளவுக்கு தலைக்கு எண்ணெய் தேய்க்க வேண்டும் என்று கூறியிருக்கின்றனர். இவ்வாறு போதிய ஊட்டச்சத்து இல்லாமையாலும் மாசுக்கள் போன்ற பல காரணங்களால், தலைமுடியின் வளர்ச்சி குறைவாக இருக்கும்..

அதிலும் குறிப்பாக தலைமுடியின் நுனிப்பகுதியில் உண்டாகும் வெடிப்புகள் தலைமுடி உதிர்தலுக்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது. இதற்கு கெமிக்கல் ஷாம்பு, எண்ணெய்களைப் பயன்படுத்துவதை விட இயற்கைப் பொருள்களைக் கொண்டு, தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டிவிட முடியும். இதற்கு வாழைப்பழம் மிகச்சிறந்த தீர்வாக அமையும்.


வாழைப்பழம் ஒன்றை மசித்து, 2 டேபிள் ஸ்பூன் தயிர், சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை கலந்து, வேர் முதல் முடியின் நுனிப்பகுதி வரை தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும். வாரம் இருமுறை இவ்வாறு செய்து வந்தால் தலைமுடியின் வளர்ச்சி தூண்டப்படும். மிக விரைவாகவே அதன் வளர்ச்சியை உங்களால் உணர முடியும்.

முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் பால் ஆகிய இரண்டையும் கலந்து, அதை தலையில் நன்கு தடவி, 20 நிமிடம் ஊறவைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

ஒரு பப்பாளி பழத்தை எடுத்து நன்கு அரைத்து, அதனுடன் சிறிதளவு தயிர் சேர்த்து தலைமுடியில் தடவி 45 நிமிடம் ஊறவைத்து கழுவ வேண்டும்.

ஆலிவ் ஆயில், விளக்கெண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் ஆகிய அனைத்தையும் சரிசம அளவில் எடுத்து வெதுவெதுப்பாக சூடேற்றி, அதை ஈரமான தலைமுடியில் தடவி, மசாஜ் செய்து 1 மணிநேரம் கழித்து, சீயக்காய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!