கற்களையே காணிக்கையாக பெறும் வினோத கோவில் பற்றி தெரியுமா..?


கற்களையே காணிக்கையாக பெறும் வினோத கோவில் ஒன்று கர்நாடகாவில் உள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூரு – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மாண்டியா நகரில் இருந்து 2 கி.மீ தொலைவில் கொடிகல்லினா காடு பசப்பா கோவில் உள்ளது.

குறிப்பாக கிரகண்டாரு-பெவினஹல்லி சாலையில் இடம்பெற்றுள்ளது. இங்கு வரும் பக்தர்கள் காணிக்கையாக தங்கம், வைரம் அல்லது ஹோமமோ, பூஜைக்களோ செய்யப்படுவது இல்லை.

அதற்கு பதிலாக மூன்று அல்லது ஐந்து கற்களை அளித்து வணங்கினால் போதும்.

இங்கு அமைந்துள்ள காடு பசப்பா(சிவபெருமான்), கற்களை அன்போடு ஏற்றுக் கொண்டு, பக்தர்களின் கோரிக்கையை தீர்த்து வைப்பார் என்று நம்பப்படுகிறது.

இந்த சாமிக்கு வடிவம் என்று ஏதுமில்லை. கற்கள் மட்டுமே அமைந்துள்ளது.

அருகிலுள்ள கிராம மக்கள் அறுவடை முடிந்து, கற்களை வழங்கி நல்ல விளைச்சலுக்கு நன்றி தெரிவித்து வணங்குவது வழக்கம்.

இதேபோல் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வழிபட்டு செல்கின்றனர்.-Source: tamil.samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!