அமேசான் நிறுவனத்திற்கு இத்தனை கோடி அபராதம் விதிப்பா..?

முதலீடு தொடர்பான தகவல்களை முழுமையாக அளிக்காமல் மறைத்த புகாரில் அமேசான் நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அமேசான் நிறுவனத்திற்கு வர்த்தக போட்டி முறைப்படுத்துதல் ஆணையம் 202 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

2019-ம் ஆண்டு ஃபியூச்சர் குழும நிறுவனத்தில் 49 சதவீத பங்குகளை வாங்கியது தொடர்பான நோக்கத்தை வெளிப்படுத்தவில்லை என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலீடு தொடர்பான தகவல்களை முழுமையாக அளிக்காமல் மறைத்த புகாரில் அமேசான் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஃபியூச்சர் குழும நிறுவனத்தின் பங்குகளை வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்திற்கு அளித்த அனுமதியையும் நிறுத்தி வைத்துள்ளது.

அடுத்த 60 தினங்களுக்குள் விரிவான படிவத்தை அமேசான் சமர்ப்பிக்க வேண்டும் என வர்த்தக போட்டி முறைப்படுத்துதல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!