காசநோயால் அதிகம் பாதிக்கப்பட்டவரா..? ஆய்வில் புதிய மருந்து கண்டுபிடிப்பு..!


காசநோயை குணப்படுத்தும் ஆற்றல் ஒரு வகை வெங்காயத்திற்கு இருப்பதாக ஆய்வொன்று கூறுகிறது.

ஒரு வகை பெர்சிய வெங்காயத்திலிருந்து பிரித்து எடுக்கப்படும் சாரானது, காசநோய்க்கு கொடுக்கப்படும் மருந்திற்கு வலுசேர்ப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.

2016 ஆம் ஆண்டு கணக்குப்படி தீவிரமான காச நோயால், 4,90,000 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மருந்து கொடுத்தும் பலன் இல்லாத அளவுக்கு தீவிரமான காச நோய் இவர்களுக்கு இருக்கிறது. இந்த புதிய ஆய்வானது, அவர்களை குணப்படுத்த உதவும்.

ஆனால், இந்த ஆய்வு ஆரம்பக்கட்டத்தில்தான் இருக்கிறது. மருத்துவ சோதனை இன்னும் செய்ய வேண்டி இருக்கிறது.

இரான் உணவு

இரான் உணவில் பிரதானமானதாக இருக்கும் ஒருவகை வெங்காயத்திலிருந்து நான்கு விதமான மூலகூறுகளை எடுத்து ஆராய்ச்சியாளர்கள் பரிசோதித்தனர்.

இந்த ஆராய்ச்சியை பிர்க்பெர்க், லண்டன் பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியும் இணைந்து மேற்கொள்கிறது.

இந்த ஆராய்ச்சியில் பங்கெடுத்த பிர்க்பெர்க் கல்லூரியின் உயிரியல் துறையைச் சேர்ந்த டாக்டர் சஞ்சீப் பக்தா, “உலகளவில் காசநோயை குணப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் பெரிய அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், 2016 ஆம் ஆண்டு மட்டும் காசநோயால் 2 மில்லியன் பேர் இறந்துள்ளனர். 10 மில்லியன் பேர் அந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.” என்கிறார்.

படைப்பூக்கம் நிறைந்த வேதியிலாளர்

இந்த ஆய்வில் பங்கெடுத்த பேராசிரியர் சைமன் கிப்பான்ஸ், “இயற்கை ஒரு ஆச்சர்யமான படைப்பூக்கம் நிறைந்த வேதியிலாளர். இந்த பெர்சிய வெங்காயம் போன்ற செடிகள், சூழலில் உள்ள நுண்ணுயிர்களிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக இயற்கையாகவே தேவையான வேதிகளை உற்பத்தி செய்கிறது.”

பரிசோதனை கூடத்தில் பரிசோதிக்கப்பட்ட இந்த மூலகூறுகளை, ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள ஆண்டிபயாடிக் மருந்துடன் சேர்த்து காசநோய்க்கான புதிய மருந்தினை உருவாக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.-Source: bbc

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!