இந்த பொருட்களை வைத்து குளியலறையை ஈஸியாக சுத்தம் செய்யலாம் என தெரியுமா..?


வீட்டிலேயே குளியலறையில் தான் கிருமிகள் மற்றும் அழுக்குகள் அதிகம் இருக்கும். அத்தகைய குளியலறையை சுத்தமாகவும், நறுமணத்துடனும் வைத்துக் கொள்ள, நாம் கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த பொருட்களைத் தான் பயன்படுத்துவோம்.

ஆனால் பணம் இல்லாத சமயத்தில், குளியலறையை சுத்தம் செய்யும் தீர்ந்த நேரத்தில் என்ன செய்வீர்கள்? யோசிக்காதீர்கள்,

அப்படி பணம் இல்லாத சமயத்தில் வீட்டில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டே குளியலறையை சுத்தப்படுத்தலாம்.

அதிலும் அந்த பொருட்கள் அனைத்தும் மிகவும் பிரபலமான சுத்தப்படுத்துவதில் முதன்மையாக இருக்கக்கூடியவை. இங்கு குளியலறையின் தரையை சுத்தம் செய்வதற்கு உதவும் சில இயற்கைப் பொருட்களைப் பார்க்கலாம்.

எலுமிச்சை எலுமிச்சையில் ப்ளீச்சிங் தன்மை உள்ளதால், இதன் சாற்றினை குளியலறையின் தரையில் தெளித்து, உடனே நன்கு பிரஷ் கொண்டு தேய்த்துவிட்டால், கறைகள் நீங்கிவிடுவதோடு, குளியலறையும் நன்கு நறுமணத்துடன் இருக்கும்.


உப்பு சுத்தப்படுத்தும் பொருட்களில் மிக முக்கியமான ஒன்று. அதிலும் மஞ்சள் நிற கறைகளை எளிதில் போக்க வேண்டுமானால், உப்பை தரையில் தூவி, சிறிது நேரம் கழித்து பிரஷ் கொண்டு தேய்த்து, பின் சுடுநீர் கொண்டு குளியலறையை கழுவிவிட வேண்டும்.

ஒயிட் வினிகருக்கும் சுத்தம் செய்யும் தன்மை உள்ளது. அதிலும் வினிகரை குளியலறையின் தரையில் ஊற்றி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் எலுமிச்சை சாறினை தெளித்து, பிரஷ் கொண்டு தேய்த்து விட்டு கழுவ வேண்டும்.

சோடா கூட சிறப்பாக சுத்தம் செய்யும் பண்பைக் கொண்டுள்ளது. அதற்கு சோடாவை கறை அதிகம் உள்ள இடங்களில் ஊற்றி, பின் தேய்க்க வேண்டும். இதனால் கறைகள் உடனே நீங்கும்.

வோட்கா – சற்று விலை அதிகமான பொருளாக இருந்தாலும், இதனைக் கொண்டும் குளியலறையை சுத்தம் செய்யலாம்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!